Mei Ezhuthukal Tamil-தமிழ் மெய் எழுத்து அறிவோமா?

மொழிகளில் தமிழ்மொழி தனிச் சிறப்பு வாய்ந்த மொழியாகும். அதன் அமைப்பு, இலக்கிய செறிவு போன்றவை உலகளாவிய புகழ் பெற்றது.

Update: 2023-10-28 04:14 GMT

mei ezhuthukal tamil-தமிழ் மெய் எழுத்து 

Mei Ezhuthukal Tamil

தமிழில் உயிர் எழுத்துக்கள் எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே அளவு மெய் எழுத்துக்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தமிழ் மொழிக்கு உயிர் எழுத்துக்களும் மெய் எழுத்துக்களும் அடிப்படையான எழுத்துக்கள். க் முதல் ன் வரை உள்ள 18 எழுத்துக்களும் மெய் எழுத்துக்கள் ஆகும்.

உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் இணைந்துதான் உயிர்மெய் எழுத்துக்கள் தோன்றுகின்றன. உதாரணத்திற்கு

க் + அ =க இப்படி உயிர் எழுத்து வரிசைகளுக்கு ஏற்ப கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கெள ஆகிய எழுத்துக்கள் உருவாகின்றன.

Mei Ezhuthukal Tamil






 மெய் எழுத்துக்களை ஒலிப்பது சற்று கடினம். மெய்யெழுத்துக்களில் சில எழுத்துக்கள் ஒரே ஒலி வருவது போல இருக்கும். ஆனால் அவற்றின் ஒலியில் மாறுபாடு இருக்கும். உச்சரிக்கும் போது கவனமாக உச்சரிக்க வேண்டும். மெய்யெழுத்துக்கள் உயிர் எழுத்துக்களுடன் சேர்ந்தே இயங்கும். மெய்யெழுத்துக்களை ஒற்றெழுத்துக்கள் என்றும் புள்ளிய எழுத்துக்கள் என்றும் கூறுவர்.

மெய் எழுத்துக்கள் வகைகள்

உயிர் எழுத்துக்களில் இருக்கும் குறில் நெடில் வேறுபாடு மெய் எழுத்துக்களில் இருக்காது.

மெய்யெழுத்துக்கள் மூன்று வகைப்படும். அவை

  • வல்லினம்
  • மெல்லினம்
  • இடையினம்

Mei Ezhuthukal Tamil

வல்லினம்

மெய் எழுத்துக்களில் வன்மையாக ஒலிக்கும் எழுத்துக்களை வல்லின எழுத்துக்கள் என்று கூறுவர்.

க், ச், ட், த், ப், ற்

இந்த ஆறு மெய் எழுத்துக்களும் வல்லின எழுத்துகள் ஆகும்

மெல்லினம்

மெய் எழுத்துக்களில் மென்மையாக ஒலிக்கும் எழுத்துக்களை மெல்லின எழுத்துக்கள் என்று கூறுவர்.

ங், ஞ், ண், ந், ம், ன்

ஆகிய ஆறு மெய்யெழுத்துக்களும் மென்மையாக ஒலிப்பதால் மெல்லின எழுத்துகள் ஆகும்.

Mei Ezhuthukal Tamil

இடையினம்

மெய் எழுத்துக்களில் வன்மைக்கும் மென்மைக்கும் இடையில் ஒலிக்கும் எழுத்துக்களை இடையின எழுத்துக்கள் என்று கூறுவர்.

ய், ர், ல், வ், ழ், ள்

ஆகிய ஆறு மெய் எழுத்துக்களும் வன்மைக்கும் மென்மைக்கும் இடையில் ஒலிப்பதால் இடையின எழுத்துகள் ஆகும்

Tags:    

Similar News