குமாரபாளையம், JKKN மெட்ரிக் பள்ளியில் மருத்துவ பரிசோதனை முகாம்
குமாரபாளையம் JKKN மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.
JKKN மெட்ரிக் பள்ளியில் மாணவ,மாணவிகளுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.
Young Indians, CII, YUVA மற்றும் தளிர் ஆகிய அமைப்புகள் இணைந்து, குமாரபாளையம் JKKN மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவ முகாமை நடத்தின. இந்த முகாம் 22ம் தேதி வெள்ளிக்கிழமை மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடந்தது. இந்த முகாமில் LKG முதல் 9 ம் வகுப்பு வரை பயிலும் சுமார் 600 மாணவ,மாணவிகள் கலந்துகொண்டு மருத்துவ பரிசோதனை செய்து பயன்பெற்றனர்.
மருத்துவ பரிசோதனையின் அவசியம் :
மாணவர்களுக்கு அடிப்படை மருத்துவ பரிசோதனை மிகவும் இன்றியமையாதது. மருத்துவ பரிசோதனை மூலம் மாணவர்களுக்கு உடல் நலன் மற்றும் மனநலம் சார்ந்த குறைபாடுகள் இருப்பின் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க வழிவகை கிடைக்கும். ஆகவே, மருத்துவ முகாம்கள் பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த உதவுகின்றன.
முன்னதாக, மருத்துவ பரிசோதனை முகாமினை பள்ளியின் தாளாளர் ஸ்ரீமதி.செந்தாமரை துவக்கி வைத்தார். இயக்குனர் ஓம்சரவணா முன்னிலை வகித்தார்.மேலும், பள்ளி முதல்வர், துணை முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.