JKKN ஸ்ரீ சக்திமயில் செவிலியர் கல்லூரியில் விளக்கு ஏற்றும் விழா..!
lighting ceremony-குமாரபாளையம் JKKN ஸ்ரீ சக்திமயில் செவிலியர் கல்லூரியில் விளக்கு ஏற்றும் விழா நடைபெற்றது.;
குத்துவிளக்கேற்றும் JKKN கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி.செந்தாமரை
lighting ceremony-நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் JKKN ஸ்ரீ சக்திமயில் செவிலியர் கல்லூரியில் விளக்கு ஏற்றும் விழா JKKN கல்வி நிறுவனத்தில் உள்ள செந்தூர்ராஜா அரங்கத்தில் நடைபெற்றது.
இந்த விழாவுக்கு JKKN கல்வி நிறுவங்களின் தலைவர் ஸ்ரீமதி செந்தாமரை தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்து முதலாம் ஆண்டு மாணவ,மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
JKKN ஸ்ரீ சக்திமயில் செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர்.ஜமுனாராணி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். சிறப்பு விருந்தினராக பவானி தர்மரத்னகர மகாலிங்கம், செவிலியர் கல்லூரி முதல்வர் கலைவாணி ஆகியோர் கலந்து கொண்டு செவிலியத்தின் முக்கிய பங்கு மற்றும் பிறருக்கு சேவை செய்ய உறுதிமொழி எடுப்பதன் முக்கியத்துவம் குறித்து பேசினர்.
lighting ceremony
இதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் டாக்டர். ஜமுனாராணி மற்றும் சிறப்பு விருந்தினர் கலைவாணி ஆகியோர் முதலாம் ஆண்டு மாணவர்களின் கையில் உள்ள விளக்கை ஏற்றி வைத்தனர். பின்னர் முதலாண்டு மாணவ, மாணவிகள் நைட்டிங்கேள் உறுதிமொழி ஏற்றன. இவ்விழாவில் துறைத்தலைவர்கள், பேராசிரியைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.