Fashion Design படீங்க : டீசண்ட் பேமென்ட் வாங்குங்க..!

ஃபேஷன் டிசைன் படித்துவிட்டு திறமை இருக்குமேயானால் வேலை வாங்குவது எளிதாகும். சினிமா மற்றும் டிவி நிறுவனங்களிலும் வாய்ப்பை பெறலாம்.;

Update: 2022-05-27 08:32 GMT

ஹாய் கைஸ், கடந்த பதிவில் ஏவியேஷன் படிப்பு குறித்து பார்த்தோம். பிளஸ்2 முடித்துவிட்டு என்ன படிப்பு படிக்கலாம் என்ற குழப்பத்தில் இருக்கும் உங்களுக்கு ஒரு தெளிவான வழிகாட்டவே Instanews தொடர்ந்து பல்வேறு பட்டபடிப்புகளை பதிவிட்டு வருகிறது. இந்த பதிவில் ஃபேஷன் டிசைன் படிப்புகள் பற்றி பார்க்க உள்ளோம். இலகுவாக வேலை கிடைக்கும் படிப்புகளில் இதுவும் ஒன்று.

12. ஃபேஷன் டிசைன் படிப்புகள் :

ஃபேஷன் டிசைனிங் துறையில் சிறப்பாக வளர படைப்பாற்றல் அவசியம். படைப்பாற்றல் மிக்கவராகவும், ஃபேஷனில் அதீத விருப்பம் உள்ளவராகவும் இருந்துவிட்டால் சாதனைக்கான களம் இதுவே. பேஷன் டிசைனிங்கில் இளங்கலை பட்டப்படிப்பு 4 ஆண்டுகளாகும். இப்படிப்பில் மாணவர்களுக்கு கோட்பாட்டு அறிவு மற்றும் நடைமுறை பயிற்சி அளிக்கப்படுகிறது. 12ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற கலைப்பிரிவு மாணவர்கள் இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.

ஆர்ட்ஸ் ஸ்ட்ரீம் மாணவர்களுக்கான பிரபலமான சில ஃபேஷன் டிசைன் படிப்புகள் தரப்பட்டுள்ளன:-

  • பி.டெஸ். ஃபேஷன் வடிவமைப்பு(B.Des. Fashion Design)
  • பேஷன் டிசைன் இளங்கலை(Bachelor of Fashion Design)
  • ஆடை வடிவமைப்பில் டிப்ளமோ(Diploma in Fashion Design)
  • பி.எஸ்சி. ஃபேஷன் வடிவமைப்பு(B.Sc. Fashion Design)

வழக்கமான பேஷன் டிசைன் படிப்பில் - ஸ்கெட்ச்சிங், கணினி வழி வடிவமைப்பு, ஜவுளி பொருட்கள், ஃபேஷன் வணிகம், ஃபேஷன் தொடர்பு, ஆடை வடிவமைப்பு, ஆடை டிசைனிங் , மற்றும் தனிப்பட்ட பேட்டர்ன்ஸ் போன்ற பாடங்களைக் கற்பிக்கிறது. இந்தத் துறையில் முன்னேற ஒரே ஒரு திறமை இருக்கவேண்டும். அது படைப்பாற்றல். உண்மையில், இது உங்கள் படைப்பு மூலம் உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தக்கூடிய ஒரு சிறப்பான தொழில்.

ஃபேஷன் டிசைன் வேலைகள், சம்பளம் :

ஆடை வடிவமைப்பாளர்கள் பல்வேறு வகையான தனியார் நிறுவனங்களில் வேலை செய்யலாம். சுய தொழில் செய்வதற்கு சிறந்த படிப்பு இதுவாகும். பொதுவாக ஃபேஷனில் கொடிகட்டி பறக்கும் நிறுவனங்கள், வடிவமைப்பு நிறுவனங்கள், வடிவமைப்பாளர்களால் வேலைக்கு அமர்த்தப்படலாம்.

இந்த துறையில் மரியாதை மற்றும் புகழ் பெற்ற பிறகு, ஒரு ஆடை வடிவமைப்பாளர் தனது சொந்த நிறுவனத்தை தொடங்கலாம். கண்காட்சிகள் அல்லது நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதன் மூலம் படைப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யலாம். சிறப்பான படைப்புகளை வாங்குபவருக்கு பணம் ஒரு பொருட்டே அல்ல. ஒரு படைப்பில் தனித்தன்மை இருப்பின் உங்களுக்கான வணிகத்தில் நீங்களே பாஸ்.

ஆரம்ப சம்பளம் பணி வழங்கும் நிறுவனத்தின் தரத்தைப் பொறுத்தது. சராசரியாக, தொடக்கச் சம்பளம் (தனியார்) மாதத்திற்கு ரூ.20ஆயிரம் முதல் ரூ.65ஆயிரம் வரை இருக்கலாம். தமிழகத்தில் கோவை,திருப்பூர், ஈரோடு,கரூர் போன்ற ஜவுளித்தொழில் நிறுவனங்களில் நல்ல டிசைனர்களுக்கு வேலை கிடைப்பது சிரமமான ஒன்றல்ல. (இன்னும் பேசுவோம்)

இதையும் தவற விடாதீர்கள் :

Aviation படிங்க..! ஏரோபிளான்-ல வேலை செய்யுங்க..! 

Tags:    

Similar News