JKKN பல் மருத்துவக் கல்லூரியில் லேமினேட் வெனியர்ஸ் நிகழ்ச்சி
Laminate veneers program-குமாரபாளையம் JKKN பல் மருத்துவக் கல்லூரியில் லேமினேட் வெனியர்ஸ் நிகழ்ச்சி நாளை மற்றும் நாளை மறுநாள் (29,30 தேதிகளில்) நடக்கவுள்ளது.;
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், JKKN பல் மருத்துவக் கல்லூரி சார்பில் லேமினேட் வெனியர்ஸ் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை (29ம் தேதி) மற்றும் நாளை மறுநாள் (30ம் தேதி) நடக்கவுள்ள இந்த நிகழ்ச்சிக்கு தலைமை விருந்தினராக டாக்டர். சந்திரமௌலி கலந்துகொள்கிறார். JKKN கல்வி நிறுவனங்களின் இயக்குனர் ஓம்சரவணா கௌரவ விருந்தினராக கலந்து கொள்கிறார்.
வரவேற்புரை டாக்டர் இளஞ்செழியன் வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் JKKN பல் CRI மற்றும் பிஜி மாணவர்கள், பேராசிரியர்கள், நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்கின்றனர்.