Karikalan Kattiya Kallanai-கல்லணை சிறப்பறிவோம் வாருங்கள்..!

கல்லணை என்பது கற்களை ஒன்றன் மீது அடுக்கி ஒரு புதிய இணைப்பை உருவாக்கிய நுட்பமான கட்டுமானப்பணியாகும்.

Update: 2023-12-16 10:54 GMT

karikalan kattiya kallanai-கல்லணை மதகுகள் வழியே சீறிப்பாயும் நீர்.(கோப்பு படம்)

Karikalan Kattiya Kallanai

கல்லணையானது கரிகாற் சோழனால் கட்டப்பட்டது. அதாவது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகாற் சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதை கண்டு அதை தடுக்க காவிரியில் ஒரு பெரிய அணையை கட்ட முடிவெடுத்தான்.

ஒரு நொடிக்கு 2 லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணை கட்டுவதற்கு ஒரு வழியை கண்டுபிடித்தார்கள் தமிழர்கள். காவிரி ஆற்றின் மீது பெரிய பாறைகளை கொண்டு வந்து போட்டனர். பின்னர் அந்தப் பாறைகள் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் சென்றன.

அதன்மேல் பிரிதொரு பாறையை வைத்து நடுவே தண்ணீரில் கரையாத ஒரு வித ஒட்டும் களி மண்ணை புதிய பாறைகளில் பூசி இரண்டையும் ஒட்டிக்கொள்ளும் விதமாக செய்தனர் இவ்வாறாக இந்த அணையை கட்டினர்.

Karikalan Kattiya Kallanai

சங்க காலத்தில் கரிகாலன் கல்லணையைக் கட்டி காவிரியின் போக்கை கட்டுப்படுத்தி கழனிகளில் பயிற்சி செழிப்பை உண்டாக்கியதை பட்டினப்பாலை, பெருநர் ஆற்றுப்படை பாடல்களும் தெலுங்கு சோழக்கல்வெட்டுக்களும், திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் மிகவும் அழகாக எடுத்துரைக்கின்றன.


கல்லணையின்  சிறப்புகள்

கல்லணையானது தன்னகத்தே பல்வேறு சிறப்புக்களைக் கொண்டமைந்ததாக காணப்படுகிறது. அதாவது 1839ம் ஆண்டு கல்லணை மீது பாலம் ஒன்று அமைக்கப்பட்டது. அதன் மேல் நின்று பார்த்தால் மொத்த கல்லணையின் அழகும் ஆச்சரியமும் தெரியும்.

Karikalan Kattiya Kallanai

தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் பல ஊர்களில் இருந்து வந்து கல்லணையை வியப்புடனும், ஆச்சரியத்துடனும் பார்த்து சென்றதன் ஊடாக கல்லணையின் சிறப்பானது எடுத்துக்காட்டப்படுகிறது.

உலகின் பழமை வாய்ந்த அணைகளுள் தற்போது புழக்கத்திலுள்ள ஒரு அணையாக கல்லணையே காணப்படுகிறது என்பது இந்த கல்லணையின் சிறப்பாகும்.

தொழிநுட்ப ரீதியில் எடுத்து நோக்குவோமேயானால் இந்த கல்லணையின் அடித்தளமானது மணலில் அமைக்கப்பட்டதாகும். இந்த பழந்தமிழர் தொழிநுட்பத்தை இன்று வரை வியத்தகு சாதனையாக புகழ்கின்றனர்.

Karikalan Kattiya Kallanai

12 அடி ஆழத்திற்கு கீழே பாறைகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கியே அணை கட்டப்பட்டது. அந்தப் பாறைகளின் இணைப்புக்கு களிமண் மட்டுமே சேர்ந்து கட்டப்பட்டதொரு கல்லணையே இதுவாகும்.

விவசாயிகளின் துயரத்தினை போக்குவதற்காக பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழ மன்னனினால் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்படுவதனை தடுப்பதற்காக காவிரியில் கட்டப்பட்ட ஒரு பெரிய அணையாக இந்த கல்லணை காணப்படுகிறது.

உலகமே வியக்கும் அளவிற்கு கல்லணையில் அமைக்கப்பட்ட அடித்தளத்தை ஆராய்ந்த ஆர்தர் காட்டன் என்பவர் பழந்தமிழரின் அணைகட்டும் திறனையும், பாசண மேலாண்மையினையும் உலகுக்கு எடுத்து கூறியமை இந்த அணையின் சிறப்பாகும்.

Karikalan Kattiya Kallanai

இந்த கல்லணையானது விவசாயத்தை காக்கக்கூடியதாக காணப்படுகிறது. அதாவது பாசண காலங்களில் காவிரி, வெண்ணாறு, புது ஆறு ஆகியவற்றிலும் வெள்ள காலங்களில் கொள்ளிடத்திலும் தண்ணீர் கல்லணையில் இருந்து திறந்து விடப்படும்.

இதன் காரணமாக வெள்ள காலங்களில் கல்லணைக்குள் வரும் நீரானது காவிரிக்கு இடதுபுறம் ஓடும் கொள்ளிடம் ஆற்றில் (முக்கொம்பில் காவிரியில் இருந்து பிரிந்த கிளை ஆறு) திருப்பிவிடப்படும். எனவேதான் டெல்டா மாவட்டத்தின் பல இலட்சம் ஏக்கர் நில வெள்ளத்தில் இருந்து விவசாயமானது காக்கப்படுகிறது.

கல்லணையானது 19ம் நூற்றாண்டில் ஆங்கில ஆட்சியின் போது கல்லணையாக புதுப்பிக்கப்பட்டது. அதாவது ஆங்கிலேயர் கால மேற்கட்டுமான பணிகளால் இது புதுப்பிக்கப்பட்டது.

Karikalan Kattiya Kallanai

கேப்டன் கால்ட்வெல், மேஜர்சிம், சர் ஆர்தர் காட்டன் போன்ற வல்லுநர்கள் கரிகாலன் கட்டிய கல்லணையை பார்த்து வியந்து, அதை இடிக்காமல் புதுப்பித்தனர் என்பதை நாம் அறிவதில் இருந்தே கல்லணையானது பல்வேறு சிறப்புக்களை கொண்டுள்ளது என்பதை அறியமுடிகிறது.

Tags:    

Similar News