Kamarajar Birthday-காலம் கடந்தும் வாழும் தலைவர், காமராஜர்..!

ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும்? எப்படி சிந்திக்க வேண்டும்? தொலைநோக்குத் திட்டங்கள் எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம் காமராஜர்.

Update: 2024-01-20 13:58 GMT

kamarajar birthday-பெருந்தலைவர் காமராஜர் 

Kamarajar Birthday

நாம் அனைவருக்கும் ஜூலை 15-ம் தேதி என்றால் முதலில் நினைவுக்கு வருவது கர்மவீரரின் பிறந்த நாளாகத் தான் இருக்கும். காமராஜர் பெருந்தலைவர், படிக்காத மேதை, கர்மவீரர் மற்றும் கல்விக் கண் தந்தவர் என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். இவ்வளவு சிறப்புகளைக் கொண்ட காமராஜரின் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Kamarajar Birthday

அவரது பிறந்த நாளில் அவரது வரலாறு அறிவது அவசியம் ஆகும். கடந்த 2023ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி அன்று அவருக்கு 121வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.

காமராஜர் பிறப்பு மற்றும் பெயர்க்காரணம்

காமராஜர் தமிழகத்தின் விருதுநகரில் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மை என்ற தம்பதிக்கு 1903ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி மகனாய் பிறந்தார். இவர் பிறந்ததும் இவரது தந்தை அவர்களது குலதெய்வத்தின் அருளால் பிறந்த பிள்ளை என்பதனால் அவருடைய குலதெய்வமான “காமாட்சி” என்று பெயர் சூட்டினார். அவரது அம்மா அவரை ஆசையாக ராஜா என்று அழைப்பார்கள். இந்த பெயரே நாளடைவில் மருவி காமராஜர் என்றானது.

Kamarajar Birthday

காமராஜர் கல்வி

தனது தொடக்க பள்ளி படிப்பை தனது சொந்த ஊரான விருதுநகரில் சத்திரிய வித்யா சாலா என்ற பள்ளியில் பயின்றார். காமராஜர் படிக்கும் போது இருந்தே அவருக்கு விட்டுக்கொடுக்கும் பண்பு மற்றும் அமைதியாக எல்லோருடனும் பேசும் பண்பு போன்ற நல்ல குணங்களை தன்னுள் வைத்திருந்தார்.

இருப்பினும் அவரால் தொடந்து படிக்கமுடியவில்லை. அதன் காரணம் யாதெனில் அவரது பள்ளி படிப்பினை துவங்கிய சிறிது காலத்தில் அவரது தந்தை இறந்து விட்டார். இதன் காரணமாக அவரது தாய் அவரை மிகவும் கடினப்பட்டு வளர்த்தார். தாயின் கஷ்டத்தை உணர்ந்த காமராஜர் தனது படிப்பினை துறந்து தன்னுடைய அம்மாவிற்காக அவரது மாமாவின் துணிக்கடையில் வேலைக்கு சேர்ந்தார்.

Kamarajar Birthday

அரசியல் ஈடுபாடு

காமராஜர் தனது மாமாவின் துணிக்கடையில் வேலை செய்யும் பல தலைவர்கள் உரையாற்றுவதை பார்த்து அவர்களது போராட்ட குணத்தால் ஈர்க்கப்பட்டு 1920ஆம் ஆண்டு தனது 16ஆவது வயதில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். அன்றுமுதல் அவர் மக்களுக்காக அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் எண்று தனது மனதிற்குள் கணக்கு போடு அதன்படி நடக்க ஆரம்பித்தார்.

சிறை வாழ்க்கை

முதன் முதலில் 1930ஆம் ஆண்டு வேதாரண்யத்தில் ராஜாஜி தலைமையில் உப்பு சதியாகிரக போராட்டம் தமிழகத்தில் நடந்தது . அதில் பங்கேற்று நடத்தியதற்காக அவர் கைது செய்யப்பட்டு கல்கத்தாவில் உள்ள அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.பிறகு ஒரு வருட தண்டனைக்கு பின் விடுதலை செய்யப்பட்டார்.

மீண்டும் 1940 விருதுநகரில் நடைபெற்ற குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கி கைதாகி வேலூர் சிறை சென்றார். சிறையில் இருந்தவாறே விருதுநகர் நகரத்தின் நகராட்சி தலைவர் போட்டியில் நின்று வெற்றி பெற்றார் . மீண்டும் 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் புரட்சி இயக்கத்தில் கலந்து கொண்டமையால் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த முறை மூன்று ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்தார். மொத்தமாக அவரது வாழ்நாளில் 9 ஆண்டுகள் மக்களுக்காக அவர் சிறை சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kamarajar Birthday

தமிழக முதல்வர் காமராஜர்

குலக்கல்வி அப்போது ராஜாஜியின் உத்தரவின் படி இருந்தது ஆனால் அதற்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் நாளுக்கு நாள் வந்த வண்ணம் இருந்தன . இதனால் மத்தியில் காங்கிரஸ் பலமாக இருந்தாலும் தமிழகத்தில் தனது பலத்தினை இழந்தது. இதன் காரணமாக ராஜாஜி தனது முதல்வர் பதவியினை துறந்தார். மேலும் தனக்கு பதிலாக சுப்பிரமணியம் என்பவரை நிறுத்தினார். ஆனால் சட்டசபையில் காமராசருக்கு இருந்த செல்வாக்கின் அடிப்படியில் ஓட்டெடுப்பில் வென்று 1953ஆம் ஆண்டு முதல் முறையாக தமிழகத்தின் முதல்வர் ஆனார்.

Kamarajar Birthday

மதிய உணவுத்திட்டம்

ஒருமுறை தனது அமைச்சரவை குழுவினை கூட்டி தமிழக பள்ளி தேர்ச்சி மற்றும் எண்ணிக்கை குறித்து அமைச்சர்களிடம் பேசினார் . அவர்களிடம் ஆலோசித்த பிறகு காமராஜர் ஒரு முடிவுக்கு வந்தார். மாணவர்கள் பள்ளிக்கு வர முதலில் நாம் ஒரு வழி செய்யவேண்டும் என்று நினைத்த அவர் மதியஉணவு அளித்தால் கண்டிப்பாக ஏழை மாணவர்கள் பள்ளிக்கு வருவார்கள் என்று முடிவு செய்து மதிய உணவு திட்டத்தினை துவங்கினார்.

மேலும் குலக்கல்வி திட்டத்தினை கைவிட்டார். தமிழகத்தில் மூடி இருந்த 6000 பள்ளிகளை மீண்டும் திறந்தார். மேலும் 17000க்கும் மேற்பட்ட பள்ளிகளை தமிழகம் முழுவதும் உள்ள சின்ன சின்ன கிராமங்களுக்கு அவரே சென்று திறந்து வைத்தார்.

Kamarajar Birthday

தொழில்துறையில் வேலைவாய்ப்பு

தமிழக இளைஞர்கள் படித்து முடித்து வேலை செய்யவேண்டும் என்று தனது முற்போக்கு சிந்தனையில் அவர் பல திட்டங்களை மக்களுக்காக கொண்டு வந்தார் . அதில் முக்கியமான சிலவற்றை கீழே தொகுத்துள்ளோம். ‘நெய்வேலி நிலக்கரித் திட்டம்’, ‘பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை’, ‘திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ்’, ‘கல்பாக்கம் அணு மின்நிலையம்’, ‘ஊட்டி கச்சா ஃபிலிம் தொழிற்சாலை’, ‘கிண்டி டெலிபிரிண்டர் தொழிற்சாலை’, ‘மேட்டூர் காகிதத் தொழிற்சாலை’, ‘சேலம் இரும்பு உருக்கு ஆலை’, ‘பாரத மிகு மின் நிறுவனம்’, ‘இரயில் பெட்டித் தொழிற்சாலை’, ‘நிலக்கரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை’ என மேலும் பல தொழிற்சாலைகள் காமராஜரால் உருவாக்கப்பட்டன.

Kamarajar Birthday

தமிழக அணைகள்

மேலும் மின்சாரம் மற்றும் நீர்வளதுறைகள் மீதும் நாட்டம் கொண்டிருந்த அவர் அந்தத்துறையிலும் பல வியக்கதகும் திட்டங்களை கொண்டுவந்து ஆச்சரியப்படுத்தினார் அதில் சில திட்டங்கள் ‘மேட்டூர் கால்வாய்த்திட்டம்’, ‘பவானி திட்டம்’, ‘காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம்’, ‘மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு போன்ற நீர்பாசன திட்டங்களையும்’ ஏற்படுத்தினார்.

Kamarajar Birthday

காமராஜரின் இறப்பு :

வாழ்நாளில் பல உதவிகளை மக்களுக்காக செய்த மக்கள் தலைவன் காமராஜர் அவர்கள், 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி தன்னுடைய 72 வது வயதில் காலமானார்.

தேசிய அரசியலில் பிரதமர் ஆவதற்கு வாய்ப்புகள் இருந்தும் அதை மறுத்து, இக்கட்டான சூழ்நிலைகளில் பிரதமர்களை தேர்வு செய்வதற்கு காமராஜர் வழிகாட்டியாக இருந்தவர் என்பதால் அவர் கிங் மேக்கர் என்றும் அழைக்கப்படுகிறார். 

Tags:    

Similar News