JKKN மருந்தியல் கல்லூரி மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று சாதனை

JKKN மருந்தியல் கல்லூரி மாணவர்கள் கல்லூரிகளுக்கிடையேயான போட்டிகளில் பங்கேற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.

Update: 2022-04-09 07:29 GMT

ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற JKKN மாணவ,மாணவிகள்.

JKKN மருந்தியல் கல்லூரி மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளனர். ஏப்ரல் 7ம் தேதி அன்று கோயம்புத்தூர் கற்பகம் பொறியியல் கல்லூரி ஏற்பாடு செய்திருந்த தேசிய அளவிலான மேலாண்மை மீட் "தக்ஷாக் - 2022" நிகழ்வில் JKKN மருந்தியல் கல்லூரி B.Pharm மற்றும் Pharm.D மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை வென்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இந்த பூமிக்கு மரம் அவசியம் என்பதை வலியுறுத்தும் ரங்கோலி.


காய்கறிகள் துருவும் போட்டி



இந்த "தக்ஷாக் - 2022" ("TAKSHAK - 2022") நிகழ்வில் குழு நடனம், ரங்கோலி, காய்கறி செதுக்குதல் மற்றும் முக ஓவியம் வரைதல் போன்ற பல்வேறு போட்டிகளில் JKKN மருந்தியல் கல்லூரி மாணவர்கள் பரிசு பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டினர்.

அவர்களது சாதனையை JKKN கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி.செந்தாமரை, நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர். மருந்தியல் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News