JKKN பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரியில் 'JKKN ASPIRE' புத்தாக்க கருத்தரங்கம்

jkkn students aspire seminar -குமாரபாளையம் JKKN பொறியியல்மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியில் “JKKN ASPIRE” என்ற புத்தாக்க கருத்தரங்கம் கல்லூரியில் உள்ள செந்தூர் ராஜா அரங்கில் நடைபெற்றது.

Update: 2022-08-12 12:09 GMT

சிறப்பு விருந்தினரை கௌரவிக்கும் இயக்குனர் ஓம் சரவணா.

jkkn students aspire seminar-இந்த புத்தாக்க நிகழ்ச்சியில் JKKN பொறியியல்மற்றும் தொழில் நுட்பக்கல்லூரியின் முதல்வர் டாக்டர். தமிழரசு வரவேற்புரை ஆற்றினார். JKKN கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் ஓம்சரவணா தலைமை வகித்து தலைமை உரை ஆற்றினார்.

சிறப்பு விருந்தினராக கோவையில் இருந்து நிறுவனர் KCEO, NCDC, சுந்தர் எஸ்.எம். கலந்து கொண்டார். முன்னதாக சிறப்பு விருந்தினருக்கு நிர்வாக இயக்குனர் ஓம்சரவணா நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் சுந்தர் எஸ்.எம்.

சிறப்பு விருந்தினர் சுந்தர் எஸ்.எம், பல்வேறு விளையாட்டுகளுடன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பின்பு அவர் புத்தாக்கம் குறித்து பேசினார். அதில் 'மாணவர்கள் ஏன் நேர்மறையான சிந்தனை, ஒழுக்கத்துடன் கூடிய கல்வி மற்றும் தன்னம்பிக்கை உடையவர்களாக திகழ வேண்டும்? பயிற்றுவிக்கும் முறையில் என்னென்ன மாற்றத்தை கொண்டு வரவேண்டும்? சமுதாயத்திற்கு பயனுடையவர்களாக மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும்? போன்றவைகளின் அடிப்படையில் புத்தாக்க விரிவுரை வழங்கினார்.

இந்த புத்தாக்க கருத்தரங்கம் மாணவர்கள் மத்தியில் புதுமையான முறையில் சிந்திக்கவும், புதுமைகளை படைக்கவும் உதவிகரமாக அமையும். இந்த கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் துணை முதல்வர் ஈஸ்வரமூர்த்தி செய்திருந்தார்.

இந்நிகழ்வில் சுமார் 100 மாணவ, மாணவிகள் துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் சத்தியசீலன், செந்தில், கலைவாணி, மோகன்குமார், விமலா, செல்வி.கிருத்திகா உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். நிறைவாக இயந்திரவியல் துறை பேராசிரியரும், துறைத்தலைவருமான முனைவர்.மோகன்குமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News