JKKN கலை,அறிவியல் கல்லூரி சார்பில் உலக மகளிர் தின கொண்டாட்டம்

ஜேகேகேஎன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக மகளிர் தினக்கொண்டாட்டம் நடைபெற்றது.;

Update: 2022-03-20 05:30 GMT

 மகளிர் தின விழாவில் கலந்துகொண்ட கணிதத் துறைத் தலைவர் டாக்டர். சாந்தி,NSS திட்ட அலுவலர் பாரதி, NSS திட்ட அலுவலர் டாக்டர். கே.எம்.சையத் அலி பாத்திமா ஆகியோர்.

நாமக்கல் மாவட்டம்,குமாரபாளையம் ஜேகேகேஎன் கலை,அறிவியல் கல்லூரி, NSS சார்பில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வு, BA வரலாறு மாணவி சௌமியாதேவியின் பிரார்த்தனை பாடலுடன் தொடங்கியது. NSS திட்ட அலுவலர் பாரதி வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் கணிதத் துறைத் தலைவர் டாக்டர். சாந்தி "சமூகத்தில் இளம் பெண்களின் பங்கு" குறித்து பேசினார். இந்தியாவின் சிறந்த, சாதனைப்பெண்மணிகளை அவர் முன்னிலைப்படுத்திப்பேசினார்.

NSS திட்ட அலுவலர் டாக்டர். கே.எம்.சையத் அலி பாத்திமா நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News