டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறை சார்பில் சர்வதேச கருத்தரங்கு

டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறை சார்பில் சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது.

Update: 2021-09-03 13:56 GMT

கொரோனா என்ற இந்த அசாதாரண சூழ்நிலையில் சென்னை, மதுரவாயலில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறை மற்றும் 'KRIPA DRISHTI PUBLICATIONS' இணைந்து நிகழ்நிலை (Online) மூலமாக "INTERNATIONAL WEBINAR CONFERENCE ON 'ROLE OF ROBOTICS, AUTOMATION AND ARTIFICIAL INTELLIGENCE IN BUSINESS' (COM CON 3.0)" என்ற நிகழ்ச்சி,வெள்ளி அன்று காலை 10 முதல் 2 மணி வரை இடைவெளி இல்லாமல் நடைபெற்றது.

சர்வதேச கருத்தரங்க நிகழ்வில் சர்வதேச அளவில் 5 வல்லுநர்கள், தேசிய அளவில் 5 வல்லுநர்கள் கலந்து கொண்டு மொத்தம் 10 பேர் சிறப்புரை ஆற்றினார்கள். இதில் 1000 மேற்பட்ட பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தர் முனைவர். ஏ.சி.சண்முகம், தலைவர் முனைவர். ஏ.சி.எஸ். அருண்குமார் அவர்கள், துவக்கி வைத்தார்கள். துணைவேந்தர் முனைவர்.கீதாலட்சுமி அவர்கள், பதிவாளர் முனைவர்.பழனிவேலு அவர்கள், கூடுதல் பதிவாளர் முனைவர் ஜெபராஜ், வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் சி.பா. செந்தில்குமார், ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

Tags:    

Similar News