JKKN ஸ்ரீ சக்திமயில் செவிலியர் கல்லூரியில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு கருத்தரங்கம்

JKKN ஸ்ரீ சக்திமயில் செவிலியர் கல்லூரியில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் உள்ள செந்தூர்ராஜா அரங்கத்தில் நடைபெற்றது.;

Update: 2023-02-09 09:35 GMT

விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினரை கௌரவப்படுத்தும் கல்லூரி முதல்வர்.

JKKN ஸ்ரீ சக்திமயில் செவிலியர் கல்லூரியில் நடந்த இந்த கருத்தரங்கிற்கு கல்லூரியின் முதல்வர் ஜமுனாராணி வரவேற்புரை ஆற்றினார். JKKN கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் ஓம்சரவணா வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக பெருந்துறை அரசு மருத்துவமனையின் கதிரியக்க புற்றுநோயியல் நிபுணர் டாக்டர். சுரேஷ் குமார், புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து பேசினார்.

வரவேற்புரை ஆற்றும் கல்லூரி முதல்வர் ஜமுனாராணி

அவர் பேசும்போது, 'நமது அன்றாட வாழ்வில் அதிகம் விவாதிக்கப்படும் ஒரு தலைப்பாக இருந்து வருவது புற்றுநோய். நமக்கு நெருங்கிய சிலர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இறந்திருக்கக்கூடும். புற்றுநோய் மிகவும் வலியைத் தரக்கூடியது. முடி இழப்பு, பலவீனம், உடலில் கட்டிகள் தோன்றுவது , குமட்டல் மற்றும் வாந்தி போன்றவை புற்றுநோயின் துணை பாதிப்புகள் ஆகும். பயம், கோபம், துயரம், பதட்டம், மனச்சோர்வு, வருத்தம் போன்றவற்றின் கலப்பட உணர்வுகளால் ஆட்கொள்ளப்படும் புற்றுநோயாளிகள் இறப்பில் இருந்து தப்பிக்க முடியாமல் வாழும் குறைவான ஆயுட்காலத்தை நினைத்து வருந்திக் கொண்டிருப்பார்கள்.

அவர்களுக்காக நீங்கள் அனுதாபம் கொள்ள வேண்டாம். மாறாக அவர்களிடம் அன்பு செலுத்துங்கள். அவர்களுக்கு உங்கள் புரிதல் மற்றும் ஆதரவைத் தாருங்கள். புற்றுநோய் ஆட்கொண்டவர்களை சாதாரண மனிதர்களாக வாழ அனுமதிக்க வேண்டும். புற்றுநோய் அவர்களின் உறவில் எந்த மாறுதலையும் செய்து விடுவதில்லை. அவர்களின் வாழ்நாள் குறையும்போதும், அவர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யலாம். மீதம் இருக்கும் நாட்களை திருப்தியோடு கழிக்க உதவலாம்.' இவ்வாறு அவர் பேசினார். மேலும் புற்று நோய் வரமால் எப்படி நம்மை பாதுகாப்பது என்பது குறித்தும் விரிவாக பேசினார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பெருந்துறை அரசு மருத்துவமனையின் கதிரியக்க புற்றுநோயியல் நிபுணர் டாக்டர். சுரேஷ் குமார்.

இந்த கருத்தரங்கில் JKKN கல்வி நிறுவன கல்லூரிகளின் அதிகாரிகள், முதல்வர்கள் மற்றும் மாணவ, மாணவிகள்,பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

புற்றுநோய்: எதனால் உண்டாகிறது? எவ்வாறு தவிர்ப்பது?

உலகில் ஏற்படும் உயிரிழப்புகளில் ஆறில் ஒன்றுக்கு காரணம் புற்றுநோய் என்று கூறுகிறது உலக சுகாதார நிறுவனம்.

புற்றுநோய் உண்டாவதற்கான கீழ்க்காணும் ஐந்து முக்கிய காரணிகளை அந்த அமைப்பு பட்டியலிடுகிறது.

புகையிலைப் பொருட்களை உட்கொள்வது

 மது அருந்தும் பழக்கம்

அதிக உடல் எடையுடன் இருப்பது

குறைந்த அளவில் பழங்களையும் காய்கறிகளையும் உட்கொள்வது

உடல் உழைப்பு இல்லாமை

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள்.

மேற்கண்டவற்றில் அதிகம் பேருக்கு புற்றுநோய் வரக் காரணமாக இருப்பது புகையிலைப் பழக்கம்தான். உலக அளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களில் 22% பேரின் பாதிப்புக்கு காரணமாக இருப்பது புகையிலை மட்டுமே. அது புகைப் பிடித்தல் மட்டுமல்ல. வேறு எந்த வகையில் புகையிலைப் பொருட்களை உட்கொண்டாலும் புற்றுநோய் வர வாய்ப்புண்டு.

புற்றுநோய், மாரடைப்பைத் தடுக்க இதோ ஓர் எளிய வழி!

'உயரமானவர்களுக்கு புற்றுநோய் ஆபத்து அதிகம்'- ஆய்வாளர்கள்

உலகில் ஆறு நொடிக்கு ஒரு நபரின் மரணத்துக்கு காரணமாக இருப்பது புகையிலையால் உண்டாகும் நோய்களே என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

புற்றுநோய் பல உறுப்புகளில் வந்தாலும் நுரையீரல், கல்லீரல், பெருங்குடல், வயிறு மற்றும் மார்பகம் ஆகிய உறுப்புகளிலேயே பெரும்பாலும் புற்றுநோய் உண்டாகிறது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிகள்.

எவ்வாறு புற்றுநோயைத் தவிர்ப்பது?

மேற்கண்ட புற்றுநோய் உண்டாக்கும் காரணிகளை தவிர்ப்பதுடன், கதிர்வீச்சுகள், கற்று மாசுபாடு, பாலுறவின்மூலம் பரவும் எச்.பி.வி எனப்படும் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (Human papilloma virus) தொற்று, உள்ளிட்டவற்றைத் தவிர்ப்பதன் மூலம் புற்றுநோய் வருவதை தடுக்கலாம்.

எச்.பி.வி மற்றும் ஈரல் அழற்சி நோயை உண்டாகும் ஹெப்படிட்டீஸ்-பி வைரஸ் ஆகியவற்றுக்கு எதிரான தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதன்மூலம் புற்றுநோய் உண்டாவதை தடுக்க முடியும். இந்த தடுப்பூசிகளை போடுவதன்மூலம் மட்டுமே ஆண்டுக்கு 10 லட்சம் உயிர்களை காப்பாற்ற முடியும் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

Tags:    

Similar News