JKKN பல் மருத்துவக் கல்லூரியில் 'உலக செயற்கை பல் நிபுணர்கள் தின கொண்டாட்டம் -2023'..!
குமாரபாளையம், JKKN பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உலக செயற்கை பல் சீரமைப்பு நிபுணர்கள் தினத்தை முன்னிட்டு செயற்கை பல் சீரமைப்பு முகாம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் JKKN பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உலக செயற்கை பல் சீரமைப்பு நிபுணர்கள் தினத்தை முன்னிட்டு செயற்கை பல் சீரமைப்பு முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் JKKN கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி.செந்தாமரை தலைமை தாங்கி துவக்கி வைத்தார். நிர்வாக இயக்குனர் ஓம்சரவணா மற்றும் திருமதி. ஐஸ்வர்யலக்ஷ்மி ஓம்சரவணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செயற்கை பல் சீரமைப்பு பிரிவின் துறைத்தலைவர் டாக்டர்.தினேஷ்குமார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார் பல் மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர். இளஞ்செழியன் செயற்கை பல் சீரமைப்பு துறையின் முயற்சியை பாராட்டினார்.
செயற்கை பல் சீரமைப்பு துறையின் சார்பில் 7ம் தேதி அன்று OSCE அமர்வு தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து செவ்வாய் கிழமை காலை 9 முதல் 10.00 மணி வரை டாக்டர்.சரண்யா வினாடி வினா அடிப்படையிலான விவாதம் மற்றும் வழக்கு விவாதம் மற்றும் டிஷ்யூ கண்டிஷனர்களில் கேஸ் டிஸ்கஷனை வழங்கினார்.
8ம் தேதி அன்று, புதன்கிழமை தாடை சம்பந்தமான மெழுகு சோதனை மற்றும் முழுமையான செயற்கைப் பற்கள் நவீன முறையில் செயற்கை பல் பொருத்துவதற்கான பல் மாதிரி படிவம் எடுக்கப்பட்டது.
9ம் தேதி வியாழன் அன்று 30 நோயாளிகளுக்கு, முதுகலை மாணவர்கள் பிடிஎஸ் இறுதியாண்டு, சிஆர்ஐ மாணவர்கள் செயற்கை பல் சீரமைப்பு மையத்தின் நிபுணர்களின் ஆலோசனைப் படி சிகிச்சையை 24' மணி நேரத்திற்குள் செய்து முடித்தனர்.
செயற்கைப் பல் பொருத்திக்கொண்ட ஆண் மற்றும் பெண் முதியோர்களில் சிறந்த புன்னகையுடன் உள்ளவர்களை 'மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஸ்மைல்' ஆகப் தேந்தேடுக்கப்பட்டு அவர்களுக்கு பேஸ்ட் மற்றும் செயற்கை பல்லை சுத்தம் செய்யும் பவுடர் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டது. அதேபோல் சிறந்த செயற்கைப் பல்சீரமைப்பு செய்த மாணவர்களைப் பாராட்டி JKKN கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி. செந்தாமரை பாராட்டி, பரிசு வழங்கினார்.
மேலும் செயற்கைப் பல் சீரமைப்புத் துறை சார்பில் பல் சீரமைப்பு குறித்து 3டி பிரிண்டர் மற்றும் ஸ்கேனர் மூலம் டெமோவை இளங்கலை மாணவர்களுக்கு, முதுகலை மாணவர் டாக்டர்.கிஷோர் விளக்கினார்.
மேலும் இந்த நிகழ்வில் டாக்டர். சாய்சதன், டாக்டர். மோனிகா, டாக்டர். ஜெகதீஷ், டாக்டர். பிரவீணா, டாக்டர். சரண்யா மற்றும் டாக்டர். சாது லாவண்யா மற்றும் பல் மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர். சிகிச்சை செய்து கொண்ட அனைவருக்கும் பேஸ்ட், இலவசமாக வழங்கப்பட்டது.