Internal Marks New Rules-11,12 வகுப்புகளுக்கு இனி இப்படித்தான் இன்டர்னல் மார்க்..! புதிய விதிகள் அமல்..!
11,12ம் வகுப்பு மாணவர்களுக்காக பொதுத் தேர்வின் அகமதிப்பீட்டு மதிப்பெண் வழங்குவதற்கான புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
Internal Marks New Rules,plus1 public Examninations, Plus2 public Examinations, Director of Government Examination Tamilnadu
நடப்பு கல்வியாண்டில் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் வழங்குவது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன் அடிப்படையில் தான் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மதிப்பெண் பட்டியல் தயார் செய்யவேண்டும்.
Internal Marks New Rules
தமிழகத்தில் 2023-24ம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் சம்மேத்தில் வெளியிடப்பட்டன. அதன்படி, 12ம் வகுப்பிற்கான தேர்வுகள் 2024 மார்ச் ஒன்றாம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 12ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடக்கின்றன. 11ம் வகுப்புக்கான தேர்வுகள் 2024 மார்ச் 4ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடக்கவுள்ள. அதேபோல செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடக்கின்றன.
Internal Marks New Rules
இந்நிலையில் 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பாட வாரியாக அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் (Internal Marks) வழங்குவது தொடர்பாக அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அரசுத் தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். இந்த வழிகாட்டுதல் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தான் மாணவர்களுக்கு அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் வழங்கப்படவேண்டும். அதன்படி, மாணவர்கள் வருகை பதிவேட்டிற்கு 2 மதிப்பெண்கள் வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
Internal Marks New Rules
வருகைப் பதிவு முக்கியம்
பள்ளிக்கு 80 சதவீதத்திற்கு மேல் வருகை புரிந்திருந்த மாணவர்களுக்கு 2 மதிப்பெண்களும், 75 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை வருகை தந்த மாணவர்களுக்கு 1 மதிப்பெண்ணும் வழங்கப்பட வேண்டும். இந்த மதிப்பெண்கள் அனைத்து பாடங்களுக்கும் பொதுவானது என்பது குறிப்பிடத்தக்கது. வருகை பதிவேட்டிற்கான மதிப்பெண் விவரங்களை தனிப்படிவமாக தயாரித்து பள்ளி தலைமை ஆசிரியருக்கு வகுப்பாசிரியர்கள் வழங்க வேண்டும். இதையடுத்து உள்நிலைத் தேர்வுகளுக்கு 4 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
Internal Marks New Rules
உள்நிலைத் தேர்வு
இந்த தேர்வுகள் 40 முதல் 45 நிமிடங்கள் வரை நடைபெறும். வகுப்பு நேரங்களில் அல்லது சிறப்பு வகுப்பு நேரங்களில் இந்த தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். இதற்கான பொறுப்பு பாட ஆசிரியர்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேர்வு தொடர்பான விவரங்களை இரண்டு நாட்களுக்கு முன்பாக மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஒரு தேர்விற்கும் அடுத்த தேர்விற்கும் இடையில் 10 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும். 25 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.
Internal Marks New Rules
செயல் திட்ட மதிப்பெண்கள்
சிறந்த மூன்று தேர்வுகளின் சராசரி மதிப்பெண்ணை 4 மதிப்பெண்களுக்கு கணக்கிட்டு வழங்க வேண்டும். மேலும் ஒப்படைவு அல்லது செயல் திட்டம் அல்லது களப் பயணத்திற்கு அதிகபட்சம் 2 மதிப்பெண்கள் வழங்க வேண்டும். இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றை சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். அதே தேர்வை அனைத்து மாணவர்களுக்கும் சீராக பின்பற்ற வேண்டும்.
Internal Marks New Rules
கல்வி இணைச் செயல்பாடுகள்
அடுத்ததாக கல்வி இணைச் செயல்பாடுகளுக்கு அதிகபட்சம் 2 மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும். இதற்காக வழங்கப்பட்டுள்ள பட்டியலில் ஏதேனும் மூன்று செயல்பாடுகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு அதிகபட்சம் 2 மதிப்பெண்கள் அகமதிப்பீடாக வழங்க வேண்டும். அந்த பட்டியலில் மரம் வளர்த்தல், இலக்கிய மன்றம், கணித மன்றம், இயற்பியல் மன்றம், வேதியியல் மன்றம், சாரண சாரணியர் இயக்கம் ஆகிய தனித்திறன் வளர்க்கும் செயல்பாடுகள் உள்ளன.
Internal Marks New Rules
தொழிற்கல்விக்கான மதிப்பெண்
மேலும் நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை, இளைஞர் செஞ்சிலுவை சங்கம், சுற்றுச்சூழல் மன்றம், நுண்கலை மன்றம், முதலுதவி மன்றம், இசை மன்றம், கவின் கலை மன்றம், வினாடி வினா மன்றம், தகவல் தொழில் நுட்ப மன்றம், விளையாட்டு செயல்பாடுகள், நாடக மன்றம் என 33 செயல்பாடுகள் இடம்பெற்றுள்ளன. இதேபோல் தொழிற்கல்வி செய்முறை பாடத்திற்கான அகமதிப்பீட்டிற்கு 25 மதிப்பெண்கள் வழங்கப்படுவதற்கான வழிகாட்டுதல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.