JKKN கலை,அறிவியல் கல்லூரியில் இளங்கலை மாணவர்களுக்கான புதுமுக வகுப்பு தொடக்கம்..!

குமாரபாளையம், JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு மாணவர்களுக்கான புதுமுக வகுப்புகள் தொடங்குவதற்கான விழா நடந்தது.;

Update: 2022-08-24 13:13 GMT

இளங்களை மாணவர்களுக்கான புதுமுக வகுப்பு துவக்கவிழாவில் வரவேற்புரை ஆற்றும் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர். சீரங்கநாயகி. 

JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான புதுமுக வகுப்பு தொடங்குவதற்கான விழா 22ம் தேதி அன்று நடந்தது.


இந்நிகழ்ச்சி இறை வணக்கப்பாடலுடன் துவங்கியது. கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர். சீரங்கநாயகி முதலாமாண்டு மாணவர்களையும், பெற்றோர்களையும் வரவேற்றார். கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியர் அரவிந்ராஜா ஊக்க உரை வழங்கினார்.


கல்லூரியின் இரண்டாமாண்டு மற்றும் மூன்றாமாண்டு மாணவர்கள் சிலர் தங்கள் கல்லூரி அனுபவங்களைப் பகிர்ந்து அவர்களை வரவேற்றனர். தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம், செஞ்சிலுவைச் சங்கம், விளையாட்டுத் துறை சார்ந்த பேராசிரியர்கள் தங்கள் பணிகளைப் பற்றியும், நிகழ்ச்சிகளைப் பற்றியும், கல்லூரியின் சிறப்புகளைப்பற்றியும்  எடுத்துக்கூறினார்கள்.

துறைத் தலைவர்களும் வகுப்பு ஆசிரியர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர். நிகழ்ச்சி நாட்டுப்பண்ணுடன் நிறைவடைந்தது.

Tags:    

Similar News