JKKN கல்வி நிறுவனங்களில் 75வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம்

75th Independence Day Celebration- குமாரபாளையம், JKKN கல்வி நிறுவனங்களில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-08-16 05:08 GMT

தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செய்யும் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி.செந்தாமரை.

75th Independence Day Celebration- குமாரபாளையம், JKKN கல்வி நிறுவனங்களில் 75வது சுதந்திர தின விழா, கல்வி நிறுவன வளாகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் கல்லூரிகளின் முதல்வர்கள், உயர் அதிகாரிகள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

சுதந்திர தினவிழாவில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள்,நிர்வாகிகள்.

இந்த சுதந்திர தினவிழா நிகழ்ச்சிக்கு கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி செந்தாமரை தலையேற்றார். அவர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். அவருக்கு தேசிய மாணவர் படை சார்பில் வரவேற்பு மரியாதை அளிக்கப்பட்டது. அவர் தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கும் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி.செந்தாமரை.

JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புலமுதன்மையர் முனைவர்.பரமேஸ்வரி, கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) முனைவர்.சீரங்கநாயகி, மற்றும் JKKN கல்வியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர். ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

சுதந்திர தின விழாவையொட்டி கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை சார்பாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. என்எஸ்எஸ் பிரிவின் சார்பில் கடந்த 01ம் தேதி முதல் கல்லூரியில் கவிதைப்போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டிகள், கொடி பிடித்து தொடர் ஓட்டம், கலாச்சார நடனம், ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கும் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி.செந்தாமரை.

இதில் ஆர்வமுடன் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவ,மாணவிகளுக்கு கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி.செந்தாமரை பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இதேபோல, குமாரபாளையம் JKKN கல்வி நிறுவன பள்ளிகளிலும் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2 

Tags:    

Similar News