குமாரபாளையம், JKKN கலை, அறிவியல் கல்லூரியில் ரீடர்ஸ் கிளப் துவக்கம்
JKKN கலை அறிவியல் கல்லூரியில் ரீடர்ஸ் கிளப் துவக்கவிழா நடைபெற்றது.;
JKKN கலை அறிவியல் கல்லூரியில் ரீடர்ஸ் கிளப் துவக்கவிழா 30ம் தேதி அன்று நடந்தது. ரீடர்ஸ் கிளப் துணைத் தலைவர் முனைவர் ஸ்ரீ.உமா சிறப்பு விருந்தினர் மற்றும் மாணவர்களை வரவேற்றார். இந் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கவிஞர். இரா.வசந்தகுமார் 'புத்தகம் பேசுகிறது" என்ற தலைப்பில் பேசினார்.
ரீடர்ஸ் கிளப் உறுப்பினர் சத்தியபிரகாஷ், முனைவர். சத்யா, நூலகர் சசிகலா மற்றும் ரீடர்ஸ் கிளப்- ன் மாணவ,மாணவிகள் 50க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ரீடர்ஸ் கிளப் செயலர் உமாராணி நன்றி கூறினார். நாட்டுப்பண்ணுடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.