'இல்லம் தேடி கல்வி' இப்படியா ஆங்கிலத்தில் கூறுவது? கல்வித்துறை கவனத்திற்கு..

Kalvi Meaning in English -'இல்லம் தேடி கல்வி' என்பதை தமிழக அரசு ஆங்கிலத்தில் சரியான பொருளில் வரும்படி கூறுதல் சிறப்பைத்தரும்.

Update: 2022-03-23 10:14 GMT

Kalvi Meaning in English -1-8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் குறைபாட்டைப் போக்குவதற்காக, அவர்களின் இல்லங்களுக்கே சென்று பாடம் நடத்தும் "இல்லம் தேடிக் கல்வி" என்ற திட்டம் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தொடங்கப்பட்டது.

இந்த திட்டம் எந்த வகையில் மாணவர்களுக்கு பயன் அளிக்கிறது என்ற பொருளடக்கத்துக்குள் நாம் செல்லவில்லை. ஆனால், இதை Google தேடுதல் பொறியில் "Home Search Education" என்றும் "Education At Doorstep " என்றெல்லாம் ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளனர். "Education At Doorstep " என்பது கூட பரவாயில்லை. ஏற்பதாக உள்ளது. ஆனால், "Home Search Education" என்பது பொருள் தருவதாக இல்லை.

இதை கல்வித்துறையினர்  எப்படி கண்டுகொள்ளாமல் விட்டனர் என்பது ஆச்சர்யமே. Search என்பது தேடல் என்பதாகும். இது பெயர்ச்சொல்லுக்கு உரியது. இந்த இடத்தில் அது 'தேடி' என்ற பொருள் தராது.  'இல்லம் தேடி கல்வி' என்ற நமது திட்டம் தரும் பொருளில் 'தேடி' என்பது வினைச்சொல். வார்த்தைக்கு வார்த்தை (word to word)மொழியாக்கம் செய்தது போல உள்ளது, "Home Search Education" என்பது.

சரியான பொருளில் 'இல்லம் தேடி கல்வி' என்பதை ஆங்கிலத்தில் கூறுவதென்றால், "Education Towards Home" என்பதே சரியான பொருள் தரும். ஆகவே, கல்வித்துறை இதை சரிப்படுத்த வேண்டும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News