JKK ரங்கம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி
JKK ரங்கம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
குமாரபாளையம் JKK ரங்கம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
21ம் தேதி வியாழன் அன்று JKK ரங்கம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஸ்ரீ சக்திமயில் நர்சிங் & ரிசர்ச் நிறுவனத்தால் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், ஸ்ரீ சக்திமயில் நர்சிங் & ரிசர்ச் நிறுவனத்தின் முதல்வர் டாக்டர். ஆர். ஜமுனாராணி வரவேற்பு உரையாற்றி, நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். அவரது தலைமை உரையில், சுகாதாரமான முறையில் கை கழுவுதல் மற்றும் மாதவிடாயின்போது சுகாதாரம் பேணுதலின் முக்கியத்துவம் குறித்து ஆழமான விழிப்புணர்வு ஏற்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.
தலைமை உரையைத் தொடர்ந்து, நர்சிங் மாணவிகள் ஹரிப்ரியா,பிரியதர்ஷினி,மைதிலி ஆகியோர் கை கழுவும் நுட்பம் மற்றும் மாதவிடாயின்போது எவ்வாறு சுகாதாரம் பேணவேண்டும் என்பது குறித்து விளக்கினர்.
பள்ளியின் சேர்க்கை ஆலோசகர் முருகன் பள்ளியில் உள்ள பல்வேறு பாடப்பிரிவுகள் குறித்து விரிவான விளக்கமும், சிறந்த எதிர்காலத்திற்கான படிப்பை எவ்வாறு தேர்வு செய்வது என்பது குறித்தும் மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுமார் 100 மாணவிகள் கலந்து கொண்டனர்.