JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் Guest lecture program
விலங்கியல் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு விருந்தினர் விரிவுரை நிகழ்ச்சி (Guest Lecture Program) நடத்தப்பட்டது.
JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் விலங்கியல் முதுகலைப் பட்டதாரி & ஆராய்ச்சித் துறையின் "உயிரியல் சங்கம் (The Biology Association) 2021-2022க்கான விருந்தினர் விரிவுரை (Guest lecture program) நிகழ்ச்சி, கடந்த ஏப்ரல் 22 ம் தேதி அன்று காலை 11.30 மணிக்கு விலங்கியல் துறை ஆய்வகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உயிரியல் சங்க துணைத் தலைவர் டாக்டர் உமாமகேஸ்வரி வரவேற்புரை ஆற்றி விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். JKKN மருந்தியல் துறை இணைப் பேராசிரியர் டாக்டர். கலையரசி "ஆராய்ச்சியில் விலங்குகளைப் பயன்படுத்துவதற்கான CPCSEA வழிகாட்டுதல்கள்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
அவரது பேச்சு அறிவியலில் தொழில் மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியது. இந்த நிகழ்வில் பேராசிரியர்கள், 70 இளநிலை(UG) மற்றும் முதுநிலை(PG) மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். எம்.எஸ்.சி., விலங்கியல் மாணவி அபிநயா நன்றி கூறினார். தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது.