JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொருளாதார கருத்தரங்க கௌரவ விருந்தினர் உரை..!

guest lecture on Impact of Make in India on Indian Economy -குமாரபாளையம், JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொருளாதார கருத்தரங்கம் நடைபெற்றது.;

Update: 2022-08-20 13:00 GMT

விருந்தினரைக் கௌரவிக்கும் கல்லூரி டீன் Dr.V.R.பரமேஸ்வரி.

guest lecture on Impact of Make in India on Indian Economy-குமாரபாளையம்,JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வணிகவியல் துறை (சிஏ) மற்றும் வணிக நிர்வாகத்துறை சார்பில், "இந்தியப் பொருளாதாரத்தில் மேக் இன் இந்தியாவின் தாக்கம்" என்ற தலைப்பில் விருந்தினர் விரிவுரை (Guest Lecture) கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் உள்ள செந்தூர்ராஜா அரங்கத்தில் நடைபெற்றது.

விருந்தினர் உரை வழங்கும் முனைவர்.வேணுகோபால்

இந்த நிகழ்வுக்கு வணிகவியல் உதவிப்பேராசிரியை (சிஏ) மலையம்மாள் வரவேற்புரையாற்றினார். வணிகவியல் (சிஏ) & பிபிஏ துறைத்தலைவர் மற்றும் உதவிப் பேராசிரியை புனிதமலர் தலைமை விருந்தினர் குறித்த அறிமுக உரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக ஈரோடு கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதுகலை மேலாண்மை அறிவியல் துறையின் இணைப் பேராசிரியர் முனைவர்.வேணுகோபால் கலந்து கொண்டார். கல்லூரியின் டீன் Dr.V.R.பரமேஸ்வரி சிறப்பு விருந்தினரை கௌரவித்தார்.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முனைவர். வேணுகோபால் பேசுகையில், i) அதிக வேலை வாய்ப்பை உருவாக்குவது ii) புதிய தயாரிப்பு கண்டுபிடிப்பு iii) இளைஞர்களுக்கு அதிகாரமளிக்கும் திறன் iv) தொழில்துறை வளர்ச்சிக்கான சிறு சிறு நடுத்தர நிறுவன (MSME) மற்றும் "அக்னி பாரத்" பற்றிய நுண்ணறிவை மாணவர்களுக்கு வழங்கினார்.

கருத்தரங்கில் பங்கேற்றவர்கள்.

இதனை தொடர்ந்து இந்தியப் பொருளாதாரத்தில் மேக் இன் இந்தியாவின் தாக்கம் என்ற தலைப்பில் நடைபெற்ற விவாதத்தில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அவர்களின் சந்தேகங்களுக்கு சிறப்பு விருந்தினர் முனைவர்.வேணுகோபால் விளக்கமளித்தார்.

இந்த விருந்தினர் விரிவுரை நிகழ்வில் வணிகவியல் (CA) & BBA துறையில் 260க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அமர்வின் முடிவில் வணிகவியல் உதவிப் பேராசிரியை மணிமேகலை நன்றியுரை ஆற்றினார். தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது.

Tags:    

Similar News