JKKN மருந்தியல் கல்லூரியின் மருந்தியல் பயிற்சித் துறையால் நடத்தப்படும் மருந்துத் தகவல் மையம் சார்பில் மருந்தியல் கல்லூரி மாணவர்களுக்கான "குழந்தை மருத்துவத்தில் அடிப்படை ஆய்வக விளக்கம் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசியின் பயணம்" என்கிற ஆய்வு விரிவுரைக்கு ஏற்பாடு செய்திருந்தது.
கடந்த ஏப்ரல் 30ம் தேதி அன்று விரிவுரையாற்ற ஈரோடு, அரசு தலைமை மருத்துவமனை,உதவி அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்.பி.பாவேந்தன் வருகை தந்தார்.
JKKN மருந்தியல் கல்லூரியின் மருந்தியல் பயிற்சித் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர்.என்.வெங்கடேஸ்வரமூர்த்தி, விருந்தினர் பேச்சாளருக்கு நினைவுப் பரிசு வழங்கி அமர்வைத் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து "குழந்தை மருத்துவத்தில் அடிப்படை ஆய்வக விளக்கம் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசியின் பயணம்" என்ற தலைப்பில் டாக்டர்.பி.பாவேந்தன் விரிவுரையாற்றினார்.
இந்த அமர்வு மாணவர்களின் எதிர்கால பயிற்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அமர்வின் பின்னர் விரிவுரையாற்றிய அறுவைச் சிகிச்சை நிபுணருக்கும், மாணவர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. JKKN மருந்தியல் கல்லூரியின் மருந்தியல் பயிற்சித் துறை இணைப் பேராசிரியர் டாக்டர்.கிருஷ்ணவேணி நன்றி கூறினார்.