JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியின் 9வது பட்டமளிப்பு விழா

JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா, தலைவர் ஸ்ரீமதி செந்தாமரை தலைமையில் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

Update: 2022-11-26 05:41 GMT

பட்டமளிப்பு விழாவில் தலைமை உரையாற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி செந்தாமரை. 

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் 9வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

பட்டமளிப்பு  விழாவில் உரையாற்றும் இயக்குனர் ஓம் சரவணா.

இந்த பட்டமளிப்பு விழாவிற்கு JKKN கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி செந்தாமரை தலைமை தாங்கினார். இயக்குனர் ஓம்சரவணா முன்னிலை வகித்தார். இந்த விழாவில் கல்லூரியின் முதல்வர் ரூபன் தேவ பிரகாஷ் வரவேற்புரை ஆற்றினார். முதலாமாண்டு துறைத் தலைவர் சசிதரன் பட்டமளிப்பு நாள் அறிக்கையை வாசித்தார்.

ஒரு மாணவிக்கு பட்டம் வழங்கும் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி செந்தாமரை.

JKKN கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி செந்தாமரை தலைமையுரை ஆற்றினார். அவர் பேசும்போது, 'இளைஞர்களே நாட்டின் மிகப் பெரிய சக்தி, உங்களால் எதையும் சாதிக்க முடியும். நீங்கள் ஒரு புகழ்பெற்ற நிறுவனங்களில் பணிகிடைத்து உயர் நிலை அடைந்தால், அது உங்கள் தொழில் மற்றும் வாழ்க்கையை மேம்படுத்தும். கூடவே உங்கள் வளர்ச்சி நமது கல்வி நிறுவனத்தை பெருமைப்படுத்தும்.இளைஞர்களை சமூகப்பொறுப்புள்ள குடிமக்களாக உருவாக்குவதில் உயர்கல்வி நிறுவனங்கள் உரிய பங்கினை ஆற்றவேண்டும். மாணவர்களை எதிர்காலத்தில் சிறந்த குடிமக்களாக உருவாக்குவதில் உயர்கல்வி நிறுவனங்கள் பெரும் பொறுப்பினை எடுத்து அவர்களுக்கு நல்வழிகாட்டும் சிறந்த வழிகாட்டிகளாக இருக்கவேண்டும்.

ஒரு மாணவனுக்கு  பட்டம் வழங்கும் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி செந்தாமரை.

அப்போதுதான் நாம் சரியான எதிர்காலத்தை உருவாக்குவதில் சரியான பங்கினை ஆற்றியுள்ளோம் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கமுடியும்.' இவ்வாறு அவர் பேசினாரஇயக்குனர் ஓம்சரவணா பேசும்போது,' பாரம்பரிய முறைகளில் இருந்து கல்வி முறையை மாற்றுவது மிக அவசியம் ஆகும். புதிய கல்விக் கொள்கையில் புதிய தொழில்நுட்ப வளர்ச்சியை அவ்வப்போது மீளாக்கம் செய்யவேண்டும். நம் நாட்டின் வளர்ச்சியை தீர்மானிப்பதில் பொறியியல் துறை முக்கிய பங்கு வகுக்கிறது. மேலும், சமுதாய தேவைகள் மற்றும் பிரச்னைகளுக்கு தீர்வு தரும் புதிய யோசனைகளை வழங்கினால் அதற்கான நிதியை வழங்க JKKN கல்வி நிறுவனங்கள் தயாராக இருக்கிறது. எவரையும் ஒரு தொழில்முனைவோராக ஆக்குவதற்கு நிறுவனம் எப்போதும் ஆதரவளித்து உதவும். மேலும் இன்றைக்கு பட்டம் பெறும் மாணவ,மாணவிகளுக்கு வளமான எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்.' இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர், 2019, 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளங்கலை மற்றும் முதுகலை மாணவ, மாணவிகள் சுமார் 373 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து பட்டம் பெற்ற மாணவ,மாணவிகள் தங்களின் கல்லூரி அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

தங்களின் கல்லூரி அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும்  மாணவ, மாணவிகள்.

கல்லூரியின் துணை முதல்வர் ஈஸ்வரமூர்த்தி நன்றியுரை வழங்கினார்.விழாவில், கல்வி நிறுவனத்தின் பள்ளி, கல்லூரிகளின் முதல்வர்கள், கல்லூரியின் அனைத்துத் துறை உயர் அதிகாரிகள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் அலுவலகப் பணியாளர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News