JKKN மருந்தியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
குமாரபாளையம், JKKN மருந்தியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது.;
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், JKKN மருந்தியல் கல்லூரி பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள JKKN கல்வி நிறுவன அரங்கில் நடைபெற்றது.
இந்த பட்டமளிப்பு விழாவுக்கு JKKN கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி.செந்தாமரை தலைமை தாங்கி விழாவினை துவக்கி வைத்து தலைமை உரை ஆற்றினார். நிர்வாக இயக்குனர் ஓம்சரவணா மற்றும் ஐஸ்வர்ய லக்ஷ்மி ஓம்சரவணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
JKKN மருந்தியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர். செந்தில் விழாவுக்கு வந்திருந்தவர்களை வரவேற்றுப்பேசினார்.
விழாவுக்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பார்மசி கவுன்சிலின் பதிவாளர், Dr.தமிழ்மொழி, கலந்து கொண்டு பட்டதாரிகளை வாழ்த்தினார். அவர்கள் பட்டம் பெற உறுதுணையாக இருந்த பெற்றோர் மற்றும் ஆசிரியர்களைப் பாராட்டினார். சிறப்பு விருந்தினர் பேசும்போது, தொழில் வல்லுநர்கள் தெளிவான கவனத்துடன் கல்வியை மேற்கொள்ள வேண்டும் என்றும், ஒழுக்கம், தலைமைத்துவம், ஆர்வம் மற்றும் கடின உழைப்பு ஆகியவை மாணவர்களின் எதிர்காலத்தில் சிறந்த வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முக்கிய காரணிகளாகும் என்று கூறினார்
சிறப்பு விருந்தினர் சேலம், MUM ஹெல்த்கேர் நிறுவன மேலாண்மை பங்குதாரர் பாலமுருகன், தனது அறிமுக உரையில் பல மகிழ்ச்சியான நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார். அவரது கல்லூரி வாழ்க்கை, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக்காட்டினார். நாட்டின் பொறுப்புள்ள குடிமக்களாக மாறவேண்டும் என்றார்.
அதன் பின் சிறப்பு விருந்தினர்கள் 150 பி.பார்ம் மற்றும் 25 பார்ம் டி மாணவ, மாணவிகளுக்கு பார்மசி பட்டங்களை வழங்கினர். அதன்பின் பார்மசி மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதில் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதாகவும், தங்கள் தொழிலின் கெளரவத்தையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
நிறைவாக துணை முதல்வர் முனைவர் சண்முகசுந்தரம் நன்றி உரை வழங்க, நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.