குமாரபாளையம், JKKN மருந்தியல் கல்லூரியில் 'நிதிவாய்ப்புகள்' குறித்த கருத்தரங்கம்

JKKN மருந்தியல் கல்லூரியில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.;

Update: 2022-09-13 13:51 GMT

கருத்தாக்கம் வழங்கும் சிறப்பு விருந்தினர்.

குமாரபாளையம், JKKN மருந்தியல் கல்லூரியில் நடந்த இந்த  விழிப்புணர்வு கருத்தரங்கம், தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) மற்றும் சோனா காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, சேலம் ஹப் ஆகிய நிறுவனங்கள், JKKN மருந்தியல் கல்லூரியின் தொழில்முனைவு, கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து "FUNDING OPPORTUNITIES" என்ற தலைப்பில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை  கல்லூரி வளாகத்தில் நடத்தியது.


இந்த நிகழ்ச்சியில் JKKN மருந்தியல் கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர்.சண்முகசுந்தரம் வரவேற்றுப் பேசினார். முதல் அமர்வில் IEDP-EDII-TN ஒருங்கிணைப்பாளர் கௌதம் சண்முகம் கருத்துரை வழஙகினார். அதில், அவர் தொழில் முனைவு மற்றும் பல்வேறு நிதித்திட்டங்கள் குறித்து பல்வேறு அறிவார்ந்த கருத்துக்களை இந்த அமர்வை வழங்கினார்.


இரண்டாவது அமர்வில் ஜக்கன் மருந்தியல் கல்லூரியின் EDC இணை ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.விஜயபாஸ்கரன், தொழில் முனைவு குறித்து தான் பெற்ற அனுபவங்களை விரிவாக விளக்கினார். டாக்டர் விஜயபாஸ்கரன் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

இக் கருத்தரங்கில்100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News