குமாரபாளையம்,JKKN கலை,அறிவியல் கல்லூரியில் ஆங்கில இலக்கிய பேரவை துவக்கவிழா
JKKN கலை,அறிவியல் கல்லூரியில் ஆங்கில இலக்கியப் பேரவை துவக்க விழா நடைபெற்றது.;
JKKN காலை அறிவியல் கல்லூரியின் ஆங்கில இலக்கியப்பேரவை துவக்கவிழா , குமாரபாளையம் JKKN கல்வி நிறுவன வளாகத்தில் உள்ள செந்தூர் ராஜா அரங்கத்தில் 12தேதி செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது.
ஆங்கில பேரவையை சேலம், Third Eye Foundation நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் சூரஜ் முரளிதரன், துவக்கி வைத்து மாணவர்களுக்கு சிறப்புரை ஆற்றினார். முன்னதாக மூன்றாம் ஆண்டு மாணவியும், ஆங்கில இலக்கிய பேரவை செயலாளருமான சுபஶ்ரீ, வரவேற்புரை ஆற்றினார்.
பொறுப்பு முதல்வர் முனைவர். C. சீரங்கநாயகி சிறப்பு விருந்தினரை கவுரவித்து வாழ்த்துரை வழங்கினார். பேரவை அறிக்கையை இளநிலை இரண்டாம் ஆண்டு மாணவியும், துணை செயலாளருமான மௌனிகா வாசித்தார். விழாவின் இறுதியில் முதுநிலை முதலாம் ஆண்டு மாணவி மேனகா நன்றி கூறினார். இந்த விழாவில் துறை பேராசிரியர்களும், மாணவ மாணவிகளும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.