JKKN நர்சிங் கல்லூரி சார்பில் ஈரோட்டில் 'பூமி தின' விழிப்புணர்வு நாடகம்

குமாரபாளையம் JKKN ஸ்ரீ சக்திமயில் செவிலியர் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் பூமி தின நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

Update: 2022-04-27 08:19 GMT

பூமியை பாதுகாப்பது குறித்த முன்னுரை வழங்கும் நர்சிங் மாணவி.

ஈரோடு, அரசு மருத்துவமனையில் 22ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று, குமாரபாளையம், JKKN ஸ்ரீ சக்திமயில் செவிலியர் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் பூமி தின நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் தலைமை மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ துப்புறவு தொழிலாளர்கள் மற்றும் B.Sc நர்சிங் -2 ஆம் ஆண்டு மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

பூமியை பாதுகாப்பது குறித்த மாணவர்களின் நாடகம்.

பூமி தினத்தையொட்டி, 2 ஆம் ஆண்டு நர்சிங் மாணவ,மாணவிகள் பூமியின் முக்கியத்துவத்தை பூமி நாடகத்தின் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதில் பூமியை எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றி மக்களுக்கு விளக்கும் விதமாக காட்சிகள் அமைத்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர், மருத்துவர்கள்,செவிலியர்கள், மருத்துவ துப்புறவு தொழிலாளர்கள், நர்சிங் மாணவ,மாணவிகள் பங்கேற்றனர். பூமியின் முக்கியத்துவம், பூமியை எவ்வாறு பாதுகாப்பது மற்றும் பூமிக்கு எதிராக தடுக்கப்படவேண்டிய மனித செயல்பாடுகள் என்னென்ன போன்றவை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 

Tags:    

Similar News