JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இலக்கிய விழா

குமாரபாளையம் JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இலக்கிய விழா நடைபெற்றது.;

Update: 2022-05-17 11:19 GMT

JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இலக்கிய விழா-22 மற்றும் மென்திறன் கருத்தரங்கு (Communication and Soft Skills) நடைபெற்றது.

விழாவில் பங்கேற்ற மாணவர்கள் 

விழாவினை கல்லூரி முதல்வர் டாக்டர். தமிழரசு தொடங்கி வைத்தார். கே.எஸ்.ஆர்.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இணை பேராசிரியர் டாக்டர்.ராஜ்மோகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தொடர்பு மற்றும் மென்திறன் என்ற தலைப்பில் பேசினார்.

மாணவ,மாணவிகள் மற்றும் கல்லூரி  ஸ்டாஃப் 

அதைத் தொடர்ந்து இலக்கிய விழா நடைபெற்றது. இதில் பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டி, பாட்டுப்போட்டிகள் நடைபெற்றன.இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இறுதியாக கணிப்பொறி அறிவியல் முதலாம் ஆண்டு மாணவி கவிதா நன்றி கூறினார். நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.

Tags:    

Similar News