CUET UG 2024-க்கான பதிவு விண்ணப்பம்..! இன்று வெளியாகலாம்..??

CUET UG 2024 க்கான பதிவு விரைவில் தொடங்க உள்ளது. அதற்கான தேர்வு மே 15 மற்றும் மே 31, 2024 க்கு இடையில் நடைபெறும் என்று NTA தெரிவித்துள்ளது.

Update: 2024-02-26 08:24 GMT

CUET 2024 news-CUET தேர்வு மாணவர்கள் (கோப்பு படம்)

CUET 2024 News, CUET 2024 Registration Link, Central Universities, NTA News Latest, CUET UG 2024, Cuet 2024 Ug Registration Date, Cuet 2024 Ug Registration Last Date

CUET UG 2024-க்கான பதிவு விரைவில் தொடங்குகிறது.

மாணவர்களே உங்கள் கவனத்திற்கு. இந்திய மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பு! CUET UG 2024 தேர்விற்கான பதிவு விரைவில் தொடங்க உள்ளது. தேசிய தேர்வு முகமை (NTA) அறிவிப்பின்படி, மே 15 முதல் மே 31, 2024 வரை CUET (UG) - 2024 தேர்வுகள் நடைபெறும்.

CUET 2024 News

CUET தேர்வு பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

Common University Entrance Test (CUET) எனப்படும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு, 2024-25 கல்வியாண்டிற்கான மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வாகும். இத்தேர்வினை NTA நடத்துகிறது. விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் cuet.samarth.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

CUET தேர்வில் மாற்றங்கள்?

இந்த மூன்றாவது CUET-UG தேர்வில் தேசிய தேர்வு முகமை (NTA) முக்கிய மாற்றங்களைச் செய்யவுள்ளதாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டுகளில் இருந்த மதிப்பெண்களை 'இயல்பாக்குதல்' (normalization) செய்யும் முறை விலக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

CUET 2024 News

தேர்வுக்கு எவ்வாறு தயாராகலாம்?

CUET தேர்வு மூன்று பிரிவுகளைக் கொண்டிருக்கும்:

பிரிவு IA - மொழிகள்: ஆங்கிலம், தமிழ், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.

பிரிவு IB - கூடுதல் மொழிகள்: பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ் போன்ற 20 மொழிகளில் ஒன்றைத் தேர்வு செய்யலாம் (விரும்பினால் மட்டும்).

பிரிவு II - களம் சார்ந்த பாடங்கள்: இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், வரலாறு, அரசியல் அறிவியல், கணக்கியல் போன்ற 27 பாடங்களில் நீங்கள் படிக்க விரும்பும் பாடம் சார்ந்த பகுதியை தேர்வு செய்து எழுத வேண்டும்.

பிரிவு III - பொதுத்தேர்வு: இப்பிரிவில் தர்க்கரீதியான பகுத்தறிதல், பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள், அளவுசார்ந்த திறன் ஆகியவற்றில் தேர்வு இருக்கும்.

CUET தேர்வு முழுவதும் கணினி வழித்தேர்வாக (Computer Based Test) நடைபெறும். தேர்வுக்கான விரிவான பாடத்திட்டத்தை CUET இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

CUET 2024 News

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற CUET தேர்வுகளின் மாதிரி வினாத்தாள்களைப் பயிற்சி செய்து பார்ப்பது நல்லது. இதனால் தேர்வின் தன்மை பற்றிய புரிதல் ஏற்படும்.

நேர மேலாண்மை முக்கியம்

CUET தேர்வில் நேர மேலாண்மை மிகவும் அவசியம். எல்லாப் பிரிவுகளுக்கும் போதுமான நேரம் ஒதுக்கி அனைத்து கேள்விகளையும் முயற்சி செய்யுங்கள்.

CUET 2024 News

விண்ணப்பிப்பது எப்படி?

  • CUET இணையதளத்திற்கு (cuet.samarth.ac.in) செல்லவும்.
  • அங்குள்ள பதிவு இணைப்பை சொடுக்கவும் (Registration link).
  • தேவையான தகவல்களைப் பதிவு செய்யவும்.
  • உங்களது புகைப்படத்தை பதிவேற்றவும்.
  • தேர்வு கட்டணத்தை செலுத்தவும்.
  • இறுதியாக 'சமர்ப்பி' (submit) பொத்தானை சொடுக்கவும்.

மாணவர்களே, CUET 2024 தேர்வுக்குத் தயாராகுங்கள், வெற்றி பெறுங்கள்!  வாழ்த்துகிறோம். 

முக்கிய குறிப்பு:

CUET தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும்போது தேர்வு அட்டவணை, விண்ணப்பிக்கும் தேதிகள் ஆகியவற்றை NTA இணையதளத்தில் கவனமாக சரிபார்க்கவும். 

Tags:    

Similar News