JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இயற்பியல் துறை சார்பில் கருத்தரங்கம்

குமாரபாளையம், JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், இயற்பியல் துறை சார்பில் கண்டக்டிவ் பாலிமர்கள்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.;

Update: 2022-08-16 13:29 GMT

JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் கலந்துகொண்ட மாணவர்கள்.

JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த கருத்தங்கில் இயற்பியல் துறை உதவிப் பேராசிரியர் தினேஷ் வரவேற்புரை யாற்றினார். சிறப்பு அழைப்பாளராக ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயற்பியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர். பூபதி கலந்து கொண்டார்.

கல்லூரியின் இயற்பியல் துறைத்தலைவர் முனைவர் லதா விருந்தினர் அறிமுகம் வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் சீரங்கநாயகி விருந்தினரை கௌரவித்தார்.

சிறப்பு அழைப்பாளர் முனைவர். பூபதி கண்டக்டிவ் பாலிமர்கள் என்ற தலைப்பில் பாலிமர்களின் தன்மை பற்றி விளக்கினார். மேலும் கடத்தும் பாலிமர்கள் தனித்துவமான மின் மற்றும் ஒளியியல் பண்புகளைக் கொண்ட கரிமப் பொருட்களின் வகுப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்பதை அவர் தெளிவாக விளக்கினார்.

அவை இரசாயன சென்சார்கள், மின்காந்தக் கவசங்கள், ஆண்டிஸ்டேடிக் பூச்சுகள், அரிப்பு தடுப்பான்களாக தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன என்பதை தெளிவாக கூறினார். கருத்தரங்கில் கண்டக்டிவ் பாலிமர்கள் தொடர்பாக மாணவர்கள் எழுப்பிய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு முனைவர். பூபதி விளக்கம் அளித்தார்.

இதில் இயற்பியல் துறை பேராசிரியர்கள் மற்றும் இயற்பியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டனர். நிறைவில் இயற்பியல் உதவிப் பேராசிரியர் யசோதரன் நன்றியுரை வழங்கினார். தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது.

Tags:    

Similar News