JKKN கலை,அறிவியல் கல்லூரி கம்ப்யூட்டர் சயின்ஸ் அஸோசியேஷன் துவக்க விழா

குமாரபாளையம் JKKN கலை,அறிவியல் கல்லூரியில் Computer Science Association துவக்கவிழா நடைபெற்றது.

Update: 2022-04-21 05:11 GMT

சிறப்பு விருந்தினரை கவுரவிக்கும் பொறுப்பு முதல்வர் சீரங்கநாயகி.

JKKN கலை,அறிவியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அஸோசியேஷன் துவக்க விழா 18ம் தேதி திங்கட்கிழமை அன்று கல்லூரி கருத்தரங்க ஹாலில் நடைபெற்றது.

விழாவில் பங்கேற்ற மாணவர்களில் ஒரு பகுதியினர்.

குமாரபாளையம் அரசு கலை,அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியை Dr. கோமதி,சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். அவர் "Emerging Computing Paradigms" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

கிளவுட் கம்ப்யூட்டிங், எட்ஜ் கம்ப்யூட்டிங், மிஸ்ட் கம்ப்யூட்டிங் போன்ற தொழில்நுட்பங்களின் சேவைகள் மற்றும் அதன் பயன்கள் பற்றி மாணவ,மாணவியர் மத்தியில் எடுத்துரைத்தார்.

விழாவில் பங்கேற்ற மாணவ,மாணவிகள்.

கல்லூரியின் பொறுப்பு முதல்வரும், கம்ப்யூட்டர் சயின்ஸ் அஸோசியேஷன் தலைவருமான முனைவர். சி. சீரங்கநாயகி, மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ்துறை இணை  பேராசிரியையும், கம்ப்யூட்டர் சயின்ஸ் அஸோசியேஷன் உபதலைவருமான முனைவர் ச. அரங்கநாயகி, ஆகியோர் தலைமை ஏற்றிருந்தனர். இந்த விழாவில் கம்ப்யூட்டர் சயின்ஸ்துறை பேராசிரியர்களும், இளங்கலை மற்றும் முதுகலை மாணவ, மாணவிகளும் திரளாக பங்கேற்றனர்.

கம்ப்யூட்டர் துறை பேராசிரியர்கள்.

கம்ப்யூட்டர் சயின்ஸ் அஸோசியேஷன் செயலாளரும், 3ம் ஆண்டு MCA மாணவியுமான கார்த்திகா வரவேற்புரை ஆற்றினார்.கம்ப்யூட்டர் சயின்ஸ் அஸோசியேஷன் உதவி செயலாளரும் 2ம் ஆண்டு MCA மாணவியுமான கவிதா அறிக்கை வாசித்தார். முதலாமாண்டு MCA மாணவன் பரத் நன்றியுரை வழங்கினார். நாட்டுப்பண்ணுடன் இவ்விழா இனிதே நிறைவுபெற்றது.

Tags:    

Similar News