JKKN காலேஜ் ஆஃப் பார்மஸி -மும்பை அஜந்தா பார்மா இணைந்து நடத்திய கேம்பஸ் இன்டர்வியூ

JKKN காலேஜ் ஆஃப் பார்மஸி- மும்பை அஜந்தா பார்மா நிறுவனம் இணைந்து B.Pharm.,மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ நடத்தியது.;

Update: 2022-04-22 14:22 GMT

JKKN காலேஜ் ஆஃப் பார்மஸி, AJANTA PHARMA நடத்திய கேம்பஸ் இன்டர்வியூவில் கல்லூரி முதல்வர் மற்றும் AJANTA PHARMA நிர்வாகிகள்.

JKKN காலேஜ் ஆஃப் பார்மஸி, மும்பையை தலைமை இடமாகக் கொண்ட பன்னாட்டு மருந்து வணிக நிறுவனமான AJANTA PHARMA உடன் இணைந்து, மருத்துவப் பிரதிநிதி பதவிக்கான கேம்பஸ் இன்டர்வியூவை நடத்தியது.

கேம்பஸ் இன்டர்வியூவில் கலந்துகொண்ட மாணவிகள்.

 20ம் (ஏப்ரல்) தேதி புதன் கிழமையன்று B. பார்ம் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு இந்த கேம்பஸ் இன்டர்வியூ கல்லூரி வளாகத்தில் நடந்தது. இந்த கேம்பஸ் இன்டர்வியூவில் 16 மாணவர்கள் கலந்துகொண்டனர். அவர்களில் 7 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

கேம்பஸ் இன்டர்வியூவில் கலந்துகொண்ட மாணவர்கள்.


கேம்பஸ் இன்டர்வியூவில் கலந்துகொண்ட மாணவர்கள்.

முன்னதாக கேம்பஸ் இன்டர்வியூ -ஐ JKKN பார்மஸி கல்லூரி முதல்வர் டாக்டர்.சம்பத்குமார் துவக்கி வைத்தார். துணை முதல்வர் டாக்டர்.சண்முகசுந்தரம் வரவேற்றுப் பேசினார். அஜந்தா பார்மாவின் பகுதி விற்பனை மேலாளர் பிரபாகரன், அஜந்தா பார்மா நிறுவனத்தின் பெருமைகள், அதன் செயல்பாடுகள், நிறுவனத்தில் உள்ள வாய்ப்புகள் மற்றும் வேலைவாய்ப்புத் தன்மை பற்றி தொகுத்து வழங்கினார். கேம்பஸ் இன்டர்வியூவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை நிர்வாகிகள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டினர்.

Tags:    

Similar News