எம்மை செதுக்க உளியாக இருந்த ஆசிரியருக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
Birthday Poems for Teachers-அறிவுக்கண் திறந்த ஆசிரியர்களை போற்றுவது நம் அறிவுக்கு நாம் செய்யும் காணிக்கை, அது காசாக அல்ல, வாழ்த்தாக..!
"சாதாரண ஆசிரியர் பாடங்களை நடத்துவார். நல்ல ஆசிரியர் பாடங்களை விளக்குவார். உயர்ந்த ஆசிரியர் பாடங்களை எடுத்துக்காட்டுகளுடன் நிரூபிப்பார். ஆனால் சிறந்த ஆசிரியர் மாணவர்களை ஊக்குவிப்பார். ”- ஆசிரியருக்கான இலக்கணமாக வில்லியம் ஆர்தர் வார்டு கூறிய சொற்றொடர்.
Birthday Poems for Teachers-ஆசிரியர்கள் என்பவர் நம் அறிவுக்கண்களைத் திறந்தவர். உலகை, உலக நடப்பை, இலக்கியங்களை, வரலாற்றை,இலக்கணங்களை, கணிதத்தை என இருளுக்குள் இருந்த எமக்கு ஒளியேற்றி அந்த பாதையில் எம்மை கைபிடித்து அழைத்துச் சென்றவர்கள். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்வது அவரை போற்றுதலுக்கு உரியதாகும். வாருங்கள் வாத்தியாருக்கு பிறந்தநாள் வாழ்த்து எப்படிக் கூறலாம் என பார்ப்போம்.
நமது வாழ்த்தை ஆசிரியரிடம் கூறும்போது ஆசிரியரின் முகத்தில் பூக்கும் ஒரு புன்னகை நாம் கற்ற கல்விக்கு ஈடாகும். அதற்கு விலைமதிப்பு கிடையாது. நாம் கூறும் வாழ்த்து ஆசிரியரின் பல ஆண்டு நினைவுப் பலகையில் வைத்திருக்க விரும்பும் அழகான அட்டையில் எழுதப்பட்ட அழகான வார்த்தை மணிகளாக இருக்கவேண்டும்.
நமது ஆசிரியரின் முயற்சிகளையும் கடின உழைப்பையும் பாராட்டுவோம். இதோ வாழ்த்துகளின் தொகுப்பு.
1. “பிறந்தநாள் வாழ்த்துகள், ஆசிரியரே. உங்கள் வாழ்க்கையும் உழைப்பும் விலைமதிப்பற்றது. ஏனென்றால் நீங்கள் நமது தேசத்தை, இந்த உலகிலேயே மிகவும் மதிப்புமிக்கதாக உயர்த்த கல்வியுடன் சேர்த்து எங்களையும் மேம்படுத்துகிறீர்கள்..!"
2. “அன்புள்ள ஆசிரியரே, அன்புடனும் மரியாதையுடனும் உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறுவதில் பெருமிதம் கொள்கிறேன். இவ்வுலகில் மதிப்புமிக்க ஒன்று உண்டென்றால் அது எங்களை இந்த உலகுக்கு எங்களை இணக்கமானவர்களாக உருவாக்கிய உங்கள் முயற்சிகளுக்கு நன்றி மட்டுமே ஈடுஇணையாகிவிடாது."
3. “எனக்குத் தெரியும், ஒவ்வொரு ஆண்டும் நமது பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் வருகிறார்கள்,செல்கிறார்கள். எனவே, நீங்கள் அனைவரையும் நினைவில் வைத்திருக்க முடியாது. ஆனால் உண்மையைச் சொல்வதானால், என் வாழ்நாளில் உங்களையும் உங்கள் மதிப்புமிக்க பாடங்களையும் நான் மறக்க மாட்டேன். என் வாழ்க்கையின் வழிகாட்டி நீங்களே..! பிறந்தநாள் வாழ்த்துகள், அன்புள்ள ஆசிரியரே ”
4. “ஐயா, ஆசிரியர்கள் நம் சமூகத்தில் மிகவும் மரியாதைக்குரியவர்கள் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன். ஏனென்றால் அவர்கள் தேசத்தைக் கட்டியெழுப்புகிறார்கள். மேலும் நேர்மையாகச் சொல்வதானால், நான் உங்களை ஒரு சிறந்த ஆசிரியராகக் கண்டேன். என் வளர்ச்சியின் பின்னணியில் உங்கள் உழைப்பும் பிணைந்து கிடக்கிறது. மதிப்புமிக்க ஆசிரியருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்"
5. “எங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதி மாணவப் பருவத்து வாழ்க்கை என்பது எல்லோரும் அறிந்ததே. உங்கள் மாணவர்களின் இந்த பருவத்தை நீங்கள் நம்பமுடியாததாக ஆக்குகிறீர்கள். கற்களாக இருந்த எங்களை செதுக்குகிறீர்கள். அந்த நாட்கள் மறக்க முடியாதவை. எனது ஆசிரியருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதில் மகிழ்கிறேன்.இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஆசானே..!
6. "நீங்கள் எனக்கு உலகின் சிறந்த ஆசிரியர். உங்கள் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் அனைத்திற்கும் நான் உங்களுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். வாழ்க்கைப்பாதைக்கு ஒளியேற்றிய தீபம் நீங்கள். எனது அன்பு ஆசானுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!"
7. “பிறந்தநாள் வாழ்த்துகள் என் மதிப்புள்ள ஆசிரியரே..! நான் இன்று மதிப்புமிக்கவனாக மாற நீங்கள் எப்போதும் ஊக்கமளித்து உதவி இருக்கிறீர்கள். எனவே என் வாழ்க்கையில் உங்கள் பங்களிப்பு மறக்க முடியாதது.
birthday poems for teachers
8. “அன்புள்ள ஆசிரிய அம்மா..! உன்னைச் சுற்றிலும் பரவியிருக்கும் ஞான ஒளியை எனக்கும் வழங்கினாய்..! அந்த ஒளி வெளிச்சத்தில் கை பிடித்து என்னை அழைத்து வந்தீர். இன்று என் வாழ்க்கை பிரகாசித்து இருக்கிறது. உங்களுக்கு இதயப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகள்!”
9. “எங்களை கல்வியறிவு பெற்றவர்களாகவும், திறமையானவர்களாகவும், மாணவர்களிடையே ஒரு ஆரோக்யமான போட்டியை எதிர்கொள்ளத் தயாராக்கினீர்கள். அதற்கான உங்கள் அயராத முயற்சிகளுக்கு நன்றி. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், எங்கள் ஆசிரியரே”
10. “பிறந்தநாள் வாழ்த்துகள், ஆசிரியரே. நீங்கள்தான் எனக்கு முன்மாதிரி. என்னை சரியான வழியில் வழி நடத்தியதற்கு நன்றி. திசையற்று நின்ற எனக்கு கலங்கரை விலக்கமாக நின்று வழி தந்தீர்; ஒளி தந்தீர்..!
11. “உலக வரலாற்றில் பல சிறந்த ஆசிரியர்கள் இருந்தனர். ஆனால் உங்களை விட யாரும் மாணவர்களைப் புரிந்து கொண்டிருக்கமாட்டார்கள். ஒவ்வொரு மாணவனின் திறனறிந்து கற்பித்த சிறந்த ஆசான், நீங்கள் மட்டுமே..! அதனால்தான் இன்று நாம் நிமிர்ந்து நிற்கிறேன். என் முதுகெலும்பாக இருந்தது நீங்கள் அளித்த கல்வி மட்டுமே..! என் ஆசானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!"
12. “அன்புள்ள ஆசிரியரே, உங்கள் தியாகம் மற்றும் வழிகாட்டுதலுக்காக முழு மனதுடன் நன்றி கூறுகிறேன். பல மகிழ்ச்சியான நாட்கள் உங்களோடு கழித்திருக்கிறேன். வாழ்க்கையை வாழ்க்கையாக வாழக் கற்றுக்கொடுத்த ஆசான் நீங்களே. சிறந்த பிறந்தநாள் வாழ்த்துகள்! ”
13. “உங்கள் அனைத்து புத்திசாலித்தனமான வார்த்தைகளுக்கும் கருணைக்கும் எனக்கான வழிகாட்டுதல்களுக்கும் நன்றி, ஆசிரியரே..! கடவுள் உங்களை என்றென்றும் ஆசீர்வதிக்கட்டும். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஆசிரியரே!”
14. “பிறந்தநாள் வாழ்த்துகள், எனது அன்புள்ள ஆசிரியரே. இத்தனை ஆண்டுகளாக உங்கள் மாணவர்களுக்கு கண்ணியத்துடனும் நேர்மையுடனும் கல்வி கற்பித்ததற்கு நன்றி. எங்கள் உயரத்தின் அளவுகோல் நீங்கள்தான். எங்களை உயர்த்திய நீங்கள் இமயத்துக்கு இணையானவர்.
15. “வாழ்க்கையில் உங்களைப் போன்ற ஒரு ஆசிரியரை நான் கொண்டிருப்பது, வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், நான் ஒருபோதும் இருட்டில் தொலைந்து போய்விடமாட்டேன் என்ற மன உறுதிதியை என் வாழ்நாள் முழுதும் நிலைத்து இருக்கச் செய்துள்ளது. என் மதிப்புமிக்க ஆசானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!"
16. “நீங்கள் ஒரு ஆசிரியர் மட்டுமல்ல, எங்களுக்கு ஒரு தத்துவஞானி மற்றும் வழிகாட்டி, போதி மரம். உங்கள் பிறந்தநாளில் எல்லா மகிழ்ச்சியும் நிலைத்து நீண்டு வாழ இறைவனிடம் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். என் ஆசானை மகிழ்ச்சியோடு வாழச்செய், இறைவா..! அவர் எனக்கான இறைவன். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஆசிரியரே!”
17. "நாங்கள் மனிதனாகப் பிறந்தோம். மனிதனாக வளர்ந்தோம், ஆனால் நீங்கள் எங்களை மனிதனாக சிந்திக்க வைத்தீர்கள். உங்கள் ஞானத்தால் எங்களை உங்கள் அறிவுக்குளத்தில் மூழ்கச் செய்தீர்கள். எங்கள் ஞான ஆசானுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்..!
18. “என்னைப் பற்றிய சிறப்பை நானறியாத போதும் எனையறிந்து என் வளர்ச்சிக்கு ஊன்றுகோலாய் இருந்தீர்கள். நான் ஒரு சிறந்த பதிப்பாக மாற நீங்கள் பதிப்பாளராக இருந்தீர்கள்..! என் வாழ்க்கையில் சாதித்தது எல்லாம் உங்கள் முனைப்பால்தான். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஆசிரியரே!”
19. “உங்கள் திறமைகள் மற்றும் முயற்சிகள் அனைத்தையும் எங்களை கல்வியாளராக ஆக்கும் முயற்சிக்கு வித்திட்டீர்கள். உங்கள் தன்னலமற்ற அர்ப்பணிப்புக்கு நன்றி. பிறந்தநாள் வாழ்த்துகள், என் அன்புள்ள ஆசிரியருக்கு ”
20. “பிறந்தநாள் வாழ்த்துகள், எனது ஆசிரிய அம்மாவுக்கு. உங்களின் விலைமதிப்பற்ற ஞானத்தை எங்களிடையே பரப்பி எங்களை ஞானக்குழந்தைகளாக உருவாக்கினீர்கள். நாட்டின் முதுகெலும்பாக இன்று நிமிர்ந்து நிற்கிறோம், உங்கள் உயர்வான உழைப்பினால்..! நன்றியம்மா..நன்றி..!
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2