அறம் செய்து வாழாவிட்டால் அடுத்தபிறவி என்னாகும்..? அறிவோம் வாருங்கள்..!

Aram Seiya Virumbu Meaning-அறம் இப்பிறவியில் மட்டுமல்ல இனிவரும் எத்தனை பிறவியிலும் நின்று நம்மைக் காக்கும்.

Update: 2023-05-12 11:09 GMT

Aram Seiya Virumbu Meaning-அறம் செய்தல் அவசியம் (கோப்பு படம்)

Aram Seiya Virumbu Meaning-இன்றைய சமுதாயத்தில் மனிதப் பிறவி வாழ்வாங்கு வாழ அறவழிப் பாதையைத் தொலைத்து வருகின்றனர். எனினும் அறவழி ஒன்றே வாழ்க்கையில் இன்றியமையாததாகும் என்பதை உணரவேண்டும். ஒரு தனி மனித வாழ்க்கைக்கு அறநெறி அல்லது ஒழுக்க நெறி என்பது இன்றியமையாத ஒன்றாகும். அது ஒன்றே இந்த சமூகத்தையும் நற் சமூகமாக கட்டமைக்கும்.


ஒழுக்கத்தின் மறுவடிவமே அறநெறி என்பது. சொர்க்கம் என்பது நமது கற்பனைக்கு எட்டாத ஒன்றாக இருக்கலாம். ஆனாலும் இந்த மண்ணுலகில் அறம் செய்து வாழ்ந்தால் அந்த சொர்க்கம் நமக்கு  கிடைக்கலாம் என்பது நம் முன்னோர் வாக்கு

இதை வலியுறுத்தியே ஒளவையார் “அறம் செய்ய விரும்பு” என்று தனது ஆத்திச்சூடியில் குறிப்பிட்டுள்ளார்.

அறம் என்பது என்ன ?

அறம் என்ற சொல்லிற்கு ஒழுக்கம், கடமை, நோன்பு, தர்மம், கற்பு, இல்லறம், துறவறம், நல்வினை போன்ற பல பொருள் கொள்ளப்படுகின்றன. மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளின் நெறிமுறையே அறம் எனலாம்.

பிறவி தோறும் மனிதனைப் பற்றிக் கொண்டு வரும் தீவினைப் பயன்களை அறுத்தெறிவதே அறம் என பொருள் கொள்ளப்படுகின்றது.

தனி மனித நடத்தை பெரும்பாலோரால் பின்பற்றப்பட்ட பொழுது ஒழுக்கமெனும் மாண்பு மலர்ந்து வாழ்க்கை நெறிமுறை சிதறாது அறம் செழித்து இருந்தது.


அறத்தின் சிறப்பியல்புகள்

மக்களாய்ப் பிறந்த நாமெல்லாம் இம்மையிலும், மறுமையிலும் மேன்மை பெற்று வாழ வேண்டுமானால் அறம் ஒன்றே நம்மைக்காக்கும். அதனால் அறம் செய்யுங்கள்.நாம் முற்பிறவியிலே செய்த அறத்தின் பயனாகவே மனித சரீரம் நமக்கு கிடைத்திருக்கின்றது. அதுவும் மனித சரீரம் பெற்று வந்துள்ளோம். இப்பிறவியிலேயும் அறத்தைச் செய்வோமானால் அடுத்த பிறவியிலும் பேரின்பம் பெறலாம்.

அறத்தைச் செய்வதற்கு எந்த கால வரையறையும் இல்லை. அதற்கு வயதும் தடையில்லை. நற்காரியங்கள் செய்ய நேரம் காலம் பார்க்கத்தேவையில்லை. அறம் நம்மைக்காக்கும். எப்பொழுது வேண்டுமானாலும் எந்நேரத்திலும் அறம் செய்யலாம். நிலையற்ற இந்த உடம்பு இருக்கும் பொழுதே நிலையான அறத்தைச் செய்து அறம், பொருள், இன்பம், வீடு என்பவற்றை அடைந்து பேரின்பம் பெறவேண்டும்.


ஒளவையாரின் கருத்து

ஒழுக்கநீதி தவறியவன் மறுபிறவியில் கூட வாழத் தகுதியற்றவன் என்கிறார் ஒளவையார். மனிதப் பிறவி பெற்ற அனைவரும் அறத்தின் வழி நின்று முதுமையில் பிறவிப் பயனை அடைய வேண்டும் என்கின்றார்.

இதனையே தனது நூலான ஆத்திசூடியில் முதல் வரியில் “அறம் செய்ய விரும்பு” என குறிப்பிடுகின்றார்.

எத்தனையோ பணம் படைத்தவர்கள் தாமும் அனுபவிக்காது பிறரையும் அனுபவிக்க விடாது பணத்தினை வீணாக்குகிறார்கள். இருப்பவர் எல்லாம் இல்லாதோருக்கு கொடுத்து வாழ்ந்தால் இங்கு இல்லாதோர் எப்படி இருப்பர்? செல்வமுடையோரே அறம் செய்து வாழுங்கள். நீங்கள் மறைந்தாலும் நீங்கள் செய்த அறம் உங்கள் பேர் சொல்லி நிலைக்கும். மனிதராய் பிறந்த நாம் இம்மையிலும், மறுமையிலும் மேன்மை பெற்று வாழ வேண்டுமானால் அறம் செய்ய வேண்டும் என ஒளவை மூதாட்டி வலியுறுத்துகின்றார்.


வள்ளுவரின் கருத்து

நிலையில்லாத உடம்பு உயிரோடு இருக்கும்போதே நிலையான அறத்தைச் செய்து துணையைத் தேடிக்கொள்ள வேண்டும் என்கின்றார் வள்ளுவர்.

இதனையே இவர் தனது குறட்பாவில்

“அன்றறிவா மென்னா தறஞ்செய்க மற்றது

 பொன்றுங்காற் பொன்றாத் துணை” என குறிப்பிட்டுள்ளார்.

அறம் செய்வோரிடத்து நான்கு குற்றங்கள் இருக்கக் கூடாது என்று வலியுறுத்துகின்றார், வள்ளுவர். அதாவது பொறாமை, அவா, வெகுளி, இன்னாச்சொல் போன்ற நான்கையும் களைந்தவனே அறஞ் செய்யும் தகுதி உடையவனாவான் என்று குறிப்பிடுகின்றார்.

இக்குற்றங்களை உடையோர் செய்யும் அறம் அறமாக கொள்ளமுடியாது. இதுவே வள்ளுவனின் அறம் பற்றிய விளக்கம். இதனை பின்வரும் குறட்பாவின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.

“அழுக்கா றவா வெகுளி யின்னாச்சொன் னாங்கு

மிழுகாத வியன்ற தறம்” என குறிப்பிட்டுள்ளார்.

முடிவாக அறஞ்செய்யாது பிறவியாகிய கடலை நீந்தி கரை சேர முடியாது என்பது முன்னோர் வாக்காகும். அதனால் அறம் செய்து வாழ்வோம். 



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News