JKKN மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 53வது ஆண்டு விளையாட்டு விழா கோலாகலம்..!

JKKN மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டுவிழா கோலாகலமாக நடைபெற்றது.

Update: 2022-11-22 12:48 GMT

போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவனுக்கு பரிசு வழங்கும் JKKN கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா,அருகில் சிறப்பு விருந்தினர்.



குமாரபாளையம் JKKN நடராஜா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 53வது ஆண்டு விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவிற்கு JKKN கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி செந்தாமரை தலைமை வகித்தார் நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா முன்னிலை வகித்தார். பள்ளியின் முதல்வர் ரம்யா வாழ்த்துரை வழங்கினார்.


விழாவில் சிறப்பு விருந்தினராக சர்வதேச வாலிபால் விளையாட்டு வீரரும், இந்தியன் ஓவர்ஸ்சிஸ் வங்கி ஆவடி கிளையின்யின் சீனியர் மேனேஜருமான ஷெல்டன் மோசஸ் கலந்து கொண்டார். பின்னர் அவர் சாரண, சாரணியர் மற்றும் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.


விழாவில் சிறப்பு விருந்தினர் பேசுகையில், 'மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாது விளையாட்டிலும் அதிக அளவில் ஆர்வம் செலுத்த வேண்டும். இன்றைய குழந்தைகள் ஸ்மார்ட் போனில் தான் அதிகம் விளையாடுகிறார்கள். இதனால் அவர்கள் உளவியல் ரீதியாக பாதிப்படைகின்றனர். அதனைத் தவிர்க்க தினமும் குறைந்தது 1 மணி நேரமாவது ஓடியாடி விளையாட வேண்டும். குழந்தைகளுக்கு உடற்பயிற்சி என்பது விளையாட்டுதான்.


எனவே, தினசரி குறிப்பிட்ட நேரம் ஓடியாடி விளையாட பெற்றோர்கள் அனுமதிப்பது நல்லது. இதனால் உடல் வலுவாகும், குழுவாகச் செயல்படுதல், முடிவு எடுத்தல் போன்ற திறன்களும் மேம்படும். உடல், உள்ளம் இரண்டையும் திறன் பெறச் செய்வது இந்த விளையாட்டுதான். இதில், வெற்றி, தோல்வி என்பது சாதாரணம். அனைத்திலும் நம் பங்கேற்பு இருக்க வேண்டியது அவசியம்.' என்று விளையாட்டின் முக்கியத்துவம் பற்றி மாணவர்களுக்கு அழகாக விளக்கினார்.


பின்னர், பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் சரவணராஜா விளையாட்டு விழா ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். அதனைத் தொடர்ந்து, யோகா, சிலம்பம், கராத்தே மற்றும் PROPERTY EXERCISE( 1-3 BOYS & GIRLS), FREE HAND EXERCISE (4 & 5 BOYS & GIRLS),HOOPS EXERCISE (6 TO 8 BOYS),MUSIC EXERCISE (6TO 8 GIRLS), INDIA DRILL EXERCISE (9 TO 12 BOYS),PIMBOM (9 TO 12 GIRLS),RIBBON DRILL (9-12 GIRLS),MALLAKHAMB (9-12BOYS), AEROBICS ( 9-12 GIRLS),PYRAMID (9-12 BOYS) உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.


இதனைத் தொடர்ந்து மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் ஷெல்டன் மோசஸ் பதக்கங்களை வழங்கி பாராட்டினார். விழாவில் பள்ளி ஆசிரியர்கள், அலுவலக, மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News