JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் அனுபவ பகிர்வு சந்திப்பு
JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் EEE, IT, MECH துறை மாணவர்களுக்கு அனுபவப்பகிர்வு நிகழ்வு நடைபெற்றது.;
JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில்(EEE),(IT),(MECH) துறைகள் இணைந்து இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான ALUMINI INSIGHT எனும் அனுபவ பகிர்வு கூட்டத்தை நடத்தியது.
விழாவில் இரண்டாம் ஆண்டு பி.டெக் மாணவி ஜெய் திவ்யா (II-B.Tech(IT) வரவேற்புரையாற்றினார்.
இதில் முன்னாள் மாணவர் (2013-2017) கௌதம்,CRI பம்ப்ஸ் நவீன்சந்திரா, தர மேலாளர் கோவை , சுபாஷ், (2015-2019) சிஎஸ்பி வங்கி, வணிக மேம்பாட்டு நிர்வாகி பவானி மற்றும் கௌதம், (2014-2018) HDFC வங்கி, தங்கக் கடன் மேலாளர் ஈரோடு, ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்குபெற்றனர்.
இந்நிகழ்வில் தகவல் தொழில்நுட்பத் துறையின் தலைவரும் மற்றும் உதவிப் பேராசிரியருமான சத்தியசீலன் அனுபவ பகிர்வுக்காக வருகை தந்திருந்த முன்னாள் மாணவர்களை கௌரவித்தார்.
இதில் முன்னாள் மாணவர்கள் தங்களது அனுபவப்பகிர்வில் பேசியதாவது, கல்லூரி மாணவர்கள் நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், எப்பொழுதும் உங்களால் இயன்றதை முயற்சி செய்து கொண்டே இருங்கள். மேலும் நீங்கள் தோல்வியுற்ற போதிலும் தொடர்ந்து கடினமாக உழைத்து உங்களின் லட்சியத்தை அடைய வேண்டும். மேலும் கல்லூரிக்கும் உங்களுக்கும் இடையே ஆன உறவு நீங்கள் பட்டம் பெற்ற பிறகும் தொடரவேண்டும். நாங்கள் படித்த கல்லூரியில் எங்களை சிறப்பு அழைப்பாளராக கௌரவித்தது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்கள்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி பேராசிரியை (EEE),.கீர்த்தனா மற்றும் உதவி பேராசிரியர் (MECH) ரஞ்சித்குமார் ஆகியோர் செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் 120 மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். அமர்வின் முடிவில் இரண்டாம் ஆண்டு (II-B.Tech(IT) மாணவி ஆர்த்தி நன்றி கூறினார்.