JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்களின் அனுபவ பகிர்வு சந்திப்பு

JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்ட நிகழ்வு நடைபெற்றது.;

Update: 2023-02-28 10:58 GMT

அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் முன்னாள் மாணவர் சசிகுமார்.

JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை (சிஏ) மற்றும் வணிக நிர்வாகத்துறை இணைந்து பி.காம்(சி.ஏ), பி.காம்(பி&ஐ), பி.காம்(ஏ&எஃப்) இறுதியாண்டு மாணவர்களுக்கு முன்னாள் மாணவர்களின் அனுபவ பகிர்வு கூட்டம் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர் கௌரவிப்பு.

இந்த விழாவில் B.Com(CA) படிக்கும் மாணவி  வரவேற்றுப் பேசினார். இந்த விழாவில் JKKN கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2018 முதல் 2021 வரை B.COM(CA) துறையில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர் சசிகுமார் தற்போது சென்னை தமிழ்நாடு சிறப்பு காவல்துறையில் பணிபுரிந்து வருகிறார். முன்னாள் மாணவரான அவர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

முன்னதாக வணிகவியல் துறைத் தலைவரும் மற்றும் உதவி பேராசிரியையுமான புனிதமலர் முன்னாள் மாணவரை கௌரவித்தார்.


பின்னர். “கற்றவர்களுக்கான நுண்ணறிவு” என்ற தலைப்பில் உரையாற்றிய சசிகுமார் மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராவது எப்படி? விளையாட்டு மற்றும் படிப்பின் முக்கியத்துவம், வெற்றியை அடைவதற்கான இலக்கை நிர்ணயிப்பது மற்றும் உடல் தகுதியில் கவனம் செலுத்துதல் பற்றிய ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதலை வழங்கினார்.

இந்த நிகழ்வில் கிட்டத்தட்ட 120 முன்னாள் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இறுதியாக B.Com(CA) மாணவி ஷாலினி நன்றி கூறினார். முன்னாள் மாணவர்களின் அனுபவப்பகிர்வு தற்போது கல்லூரியில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு ஒரு ஆர்வத்தையும் எதிர்கால வாழ்க்கையை திட்டமிட்டுக்கொள்ளவும் ஒரு வழியாக அமையும்.

Tags:    

Similar News