ராணுவக்கல்லூரியில் சேருவதற்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
இராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரியில் சேருவதற்கான, ஜூலை-2022 சேர்க்கை தகுதித் தேர்வுக்கு, விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.;
இதுகுறித்து, தூத்துக்குடி ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் மூலம் நடத்தப்படும் இராஷ்டிரிய இந்திய இராணுவக் கல்லூரி, டேராடூன் - ஜீலை 2022 சேர்க்கை தகுதித்தேர்வுக்கு, 01.07.2022 அன்று 11½ வயது நிரம்பிய வரும், 13 வயது அடையாதவரும் விண்ணப்பிக்கலாம். 02.07.2009க்கு பின்னதாகவும், 01-01-2011-க்கு முன்னதாகவும் பிறந்த 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அல்லது பயிலும் சிறார்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதித் தேர்வு 2021 டிசம்பர் 18-ம் தேதிநடைபெறுகிறது. விண்ணப்பத்தினை, The Commandant, RIMC, GarhiCantt, Dehradu, Uttarakhand, PIN--248003 என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்டவிண்ணப்பங்கள் (இரட்டைபிரதி) தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்திற்கு, 30.10.2021 அன்றுமாலை 5.45 மணிக்குள் கிடைக்கப் பெறவேண்டும்.
மேலும் தகவல்களுக்கு, www.rimc.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு, உதவி இயக்குநர் (ந.பொ)முன்னாள் படைவீரர் நலன் தூத்துக்குடி,அவர்களை நேரில் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.