குவைத்தில் நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு விழா

குவைத் நாட்டிலுள்ள அப்பாஸ்யா, ஆஸ்பயர் இந்தியன் பன்னாட்டு கல்விக் கூடத்தில் நடைபெற்றது.

Update: 2023-11-04 16:15 GMT

 குவைத்தில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் இஸ்ரேல் பாலஸ்தீன போரில் உயிரிழத்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர்

திராவிட முன்னேற்ற கழக அயலக அணி (குவைத்) மற்றும் வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர்கள் சங்கம் (குவைத்) இணைந்து நடத்தும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, குவைத் நாட்டிலுள்ள அப்பாஸ்யா, ஆஸ்பயர் இந்தியன் பன்னாட்டு கல்விக் கூடத்தில்  நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி கலந்துகொண்டார். விழாவில் "அர்த்தமுள்ள திராவிடம்" நூலை கனிமொழி கருணாநிதி எம்.பி வெளியிட்டார். குவைத்தில் உள்ள தி.மு.கழக நிர்வாகிகளை கௌரவித்து சிறப்புரையாற்றினார்.

முன்னதாக,இஸ்ரேல் போரை நிறுத்திடவும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும் இஸ்ரேலிய கொடூர தாக்குதலாலும் கொல்லப்படும் பாலஸ்தீன மக்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திடும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த விழாவில், திமுக அயலக அணி தலைவர் கலாநிதி வீராசாமி எம்.பி நிகழ்வில் முன்னிலை வகித்தார். திமுக அயலக அணி துணைச் செயலாளர் ரா.முத்துவேல், குவைத் அயலக திமுக தலைவர் சிதம்பரம் ந.தியாகராஜன், அயலக அணி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News