சுதந்திர போராட்ட வீரர் வெண்ணி காலாடி சிலை: காணொலி மூலம் திறந்த முதல்வர்

சுதந்திரப் போராட்ட வீரர் வெண்ணி காலாடி உருவ சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்;

Update: 2024-10-09 12:15 GMT

சுதந்திரப் போராட்ட வீரர் வெண்ணி காலாடி சிலைக்கு தென்காசி  மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

ரூபாய் 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் வெண்ணி காலாடி திருவுருவ சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே பச்சேரி கிராமத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் வெண்ணி காலாடிக்கு சிலை வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக வெண்ணிகாலாடிக்கு  திருவுருவசிலை அமைக்கப்பட்டுள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர் வெண்ணி காலாடியின்  திருருவ சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து  தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் சுதந்திரப் போராட்ட வீரர் வெண்ணிகாலாடி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன்,  தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா,வாசுதேவநல்லூர்  சட்டமன்ற உறுப்பினர் சதன்திருமலைக்குமார்  உள்ளிட்டவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது..

Tags:    

Similar News