தாயாரை கொன்று உடலை சூட்கேசில் எடுத்துச்சென்ற பெண்- எதற்காக தெரியுமா?

Bengaluru crime, Woman kills motherபெங்களூருவில் தாயாரை கொலை செய்து உடலை சூட்கேசில் எடுத்துச்சென்ற பெண் பற்றிய அதிர்ச்சி தகவல் இங்கு பதிவிடப்பட்டுள்ளது.;

Update: 2023-06-13 15:56 GMT

பெங்களூருவில் சூட்கேஸில் தாயின் உடலுடன் போலீஸ் நிலையத்தில்  பெண் ஒருவர் சரண் அடைந்தார்.

Bengaluru crime, Woman kills mother,பெங்களூரு நகரில் பெண் ஒருவர் நேற்று திங்கட்கிழமை மதியம் தனது தாயின் உடலை அடைத்து வைத்த டிராலி சூட்கேஸுடன் காவல் நிலையத்திற்குள் நுழைந்தார். அதனை பார்த்த காவல் நிலையத்தில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். தாங்கள் அடைந்த அதிர்ச்சியை சமாளித்துக்கொண்டு அந்த பெண் பற்றி விசாரணை நடத்தினர்.

Bengaluru crime, Woman kills mother,விசாரணையில் அஸ்ஸாமைச் சேர்ந்த அந்த பெண்ணின் பெயர் சோனாலி சென் என தெரியவந்தது. 39 வயதான பிசியோதெரபிஸ்ட் ஆன அந்த பெண்  நேற்று மதியம் 1 மணியளவில் காவல் நிலையத்திற்குள் நுழைந்து, தனது தாயை அடித்துக்கொன்று சூட்கேசில் அடைத்ததாக ஒப்புக்கொண்டார். கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவரின் பிரேம் செய்யப்பட்ட படமும், உடலுடன் சூட்கேஸுக்குள் காணப்பட்டது.

சம்பவம் நடைபெற்ற இடம் மைக்கோ லேஅவுட் காவல் நிலையம். இந்த சம்பவத்தை தொடர்ந்து  சரணடைந்த அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவர் தனது கணவருடன் வசித்து வருகிறார், மேலும் அவர் தனது 71 வயதான தாயார் பிவா பாலை  துண்டால் அடித்துக் கொன்றதாக ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

Bengaluru crime, Woman kills mother,இந்த கொலை சம்பவத்திற்கு காரணம் என்ன என்று போலீசார் கூறுகையில்

"அந்தப் பெண் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். பிசியோதெரபி படித்துள்ளார். மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். கடந்த சில வருடங்களாக வேலைக்குச் செல்லவில்லை. அவர் தனது தாய், மாமியார், மகன் மற்றும் கணவர் ஆகியோருடன் தங்கியிருந்தார். அவரது கணவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இந்த சம்பவம் அவருக்கும் அவரது தாயாருக்கும் இடையே நடந்தது. அதன் பின்னணியில் உள்ள காரணத்தை நாங்கள் இன்னும் கண்டறியவில்லை" என்று பெங்களூருவின் தென்கிழக்கு பிரிவு காவல்துறை துணை ஆணையர் சி.கே.பாபா கூறினார். மேலும்  இரத்த அழுத்த மருந்துகள் சாப்பிட்டதான் காரணமாக அவர் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கலாம் அதன் காரணமாக தனது தாயை கொலை செய்திருக்கலாம் என்றும் கூறி உள்ளார்.

Bengaluru crime, Woman kills mother,மனநோய் பற்றிய வரலாறு எதுவும் பதிவாகவில்லை, ஆனால் புறநகர்ப் பகுதியான பிலேகஹள்ளியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சோனாலி சென் தனது ஆட்டிஸ்டிக் குழந்தை, தாய் மற்றும் மாமியாரைப் பராமரிப்பவராக இருந்ததால் அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்திருக்கலாம் என்று காவல்துறை கூடுதல் தகவலை தெரிவித்து உள்ளது.

தாய் மகள் இடையே  அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால், அந்த பெண் கொடூரமான குற்றத்தை செய்ததாக, அவர் ஒப்புக்கொண்டதாக, போலீசார் தெரிவித்துள்ளனர். என்ன தான் மன அழுத்தம் ஏற்பட்டு இருந்தாலும்  பெற்ற தாயையே மகள் கொலை செய்திருப்பது அதிர்ச்சியை தான் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News