பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம், கள்ளக்காதலனுக்காக, தாய் உடந்தை, திக், திக்
பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம், கள்ளக்காதலுனுக்காக தாயே உடந்தையாக இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வடமதுரை ஈ.பி.காலனி சத்யா நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார்(வயது 35). இவர் வேடசந்தூர் அருகே உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் வேலை பார்த்து வந்தார்.
அதே இடத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த செல்வி(45) என்பவரும் வேலை பார்த்து வந்தார். அப்போது அவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.
செல்வி தனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதனால் சிவகுமார் அடிக்கடி திண்டுக்கல்லில் உள்ள செல்வி வீட்டிற்கு சென்று தனிமையில் இனிமை காண்பது வழக்கம்.
செல்விக்கு 2 மகள்கள் உள்ளனர். 2-வது மகள் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
அப்போது சிவக்குமார் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி வடமதுரையில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து சிறுமி தனது தாய் செல்வியிடம் கூறினார், மகளுக்கு நடந்த கொடுமையை பற்றி கவலைப்படாத தாய், கள்ளக்காதலனை காப்பாற்றுவதில் குறியாக இருந்துள்ளார்.
இது பற்றி வெளியே யாரிடமும் சொல்லக் கூடாது என்று மிரட்டியுள்ளார். சொந்த தாயே இப்படி கூறுவாரா என்று சிறுமி அதிர்ச்சியடைந்தார். இது குறித்து சிறுமி உறவினர்களிடம் நடந்த விஷயத்தை பற்றி கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து சிறுமியின் உறவினர்கள் வடமதுரை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். மகளிர் போலீசார் சிவக்குமார், செல்வி ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.