ரயில் முன் பாய்ந்து ரயில்வே பாதுகாப்பு படை தலைமைக்காவலர் தற்கொலை
திருச்சி ஜங்ஷன் ரயில்நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து ரயில்வே பாதுகாப்பு படை தலைமைக்காவலர் தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சியில் ரயில் முன் பாய்ந்து ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலர் தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி ஜங்ஷன் ரயில்வே பாதுகாப்பு படையில் (ஆர். பி. எப்.) தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் மஞ்சுநாத் (வயது 40 . )இவரது சொந்த ஊர் புதுக்கோட்டை. இவர் திருச்சி உடையாம்பட்டி அருகே குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று இவருக்கு திருச்சி ஜங்ஷன் இரண்டாவது நடைமேடையில் பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டு இருந்தது. பாதுகாப்பு பணியில் இருந்த இவர் கொல்லத்தில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் முன் திடீரெனப் பாய்ந்தார்.
இதில் அவர் உடல் துண்டாகி அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். அவர் தற்கொலை செய்ததற்கான காரணம் தெரியவில்லை . திருச்சி ஜங்ஷன் ரயில்வே போலீசார் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மஞ்சுநாத் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் குடும்பா பிரச்சனையா அல்லது பணி அழுத்தம் காரணமா இல்லை வேறு ஏதாவது கடன் தொல்லை போன்ற பிரச்சினைகளா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ரயில்வே சொத்துக்களையும் ரயில் பயணிகளையும் பாதுகாக்கும் பொறுப்பு ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு உண்டு. இத்தகைய கடமையுடன் பணியில் இருந்த தலைமை காவலர் மஞ்சு நாத் தானாகவே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.