அரக்கோணத்தில் மணமான இளம் பெண் மாயம் : போலீசார் தேடுதல் வேட்டை

அரக்கோணத்தில் மாயமான மணமான இளம் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update: 2021-06-20 10:49 GMT

போலீஸ் தேடுதல் வேட்டை (கார்ட்டூன் படம்)

அரக்கோணத்தில் மருந்து வாங்கச்சென்று காணாமல் போன இளம்பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர் .

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள கிருஷ்ஆப்பேட்டைச் சேர்ந்தவர் விஷாலி(21). அவருக்கு கடந்த 2018ல் திருமணமாகி கணவருடன் வாழ்ந்து  வந்த விஷாலி,  மேல் படிப்பிற்காக அரக்கோணத்திலுள்ள அவரது தாய் வீட்டில் தங்கி படித்து வந்தார்.

இந்நிலையில் மருந்து வாங்க மெடிக்கல் ஷாப்பிற்கு செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்ற  ஷாலினி மீண்டும் வீடு திரும்பவில்லை.  இதனால், அச்சமடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. அதனால்  அரக்கோணம் டவுன் போலீஸில் இது குறித்த புகாரினை அளித்தனர். அதன் பேரில் வழக்குப்பதிந்த போலீசார் காணாமல்  போன ஷாலினியைத் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News