திருச்சி அருகே போலீஸ் துப்பாக்கி சூட்டில் பிரபல ரவுடி என்கௌண்டர்
திருச்சி அருகே போலீஸ் துப்பாக்கி சூட்டில் பிரபல ரவுடி கொம்பன் ஜெகன் என்கௌண்டர் செய்யப்பட்டார்.
திருச்சி அருகே போலீஸ் துப்பாக்கி சூட்டில் பிரபல ரவுடி கொம்பன் ஜெகன் என்கௌன்டர் செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பனைய குறிச்சி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன் என்கிற கொம்பன் ஜெகன் (வயது 30 ).இவர் மீது கொலை, ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து உள்பட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. பல ஆண்டுகளாக போலீசார் இவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரவுடி கொம்பன் ஜெகன் தனது பிறந்தநாள் விழாவை சக ரவுடிகளுடன் சேர்ந்து பட்டாக்கத்தி அரிவாளுடன் கேக் வெட்டி கொண்டாடினார். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி இருந்தது. அந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் ரவுடியின் கூட்டாளிகள் 9 பேரை கைது செய்தனர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த கொம்பன் ஜெகனை தேடி வந்தனர் இந்நிலையில் திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சனமங்கலம் என்ற கிராமத்தில் ரவுடி ஜெகன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் வினோத் தலைமையிலான போலீசார் அவரை சுற்றிவழிக்க பிடிக்கும் மேற்கண்ட அப்போது ரவுடி கொம்பன் ஜெகன் வினோத்தை தாக்கினார் இதனைத் தொடர்ந்து போலீசார் அவர் மீது துப்பாக்கியால் சுற்றனர் இதில் ரவுடி ஜெகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் அவரது உடலை போலீசார் உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் திருச்சி மாவட்டத்தில் போலீஸாரால் தேடப்பட்ட வந்த தளபர ரவுடி என்கவுண்டர் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது