சப் இன்ஸ்பெக்டர் சாவிற்கு காரணமான காங்கிரஸ் எம்எல்ஏ.- மகன் மீது வழக்கு

போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சாவிற்கு காரணமான காங்கிரஸ் எம்எல்ஏ.அவரது மகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.;

Update: 2024-08-05 14:30 GMT

கர்நாடக மாநிலத்தில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மரணத்திற்கு காரணமான காங்கிரஸ் எம்எல்ஏ மற்றும் அவர் மகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கர்நாடகா மாநிலம் எதுகிரி மாவட்டம் எதுகிரி நகரில் சைபர் கிரைம் பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் பரசுராம். வயது 34 .கடந்த மூன்று ஆண்டுகளாக இவர் இந்த பிரிவில்  பணியாற்றி வந்தார். 7 மாதங்களுக்கு முன்பு இவர் திடீரென யதுகிரி நகர போலீஸ் நிலையத்திற்கு  இடம் மாற்றம் செய்யப்பட்டவர்  சமீபத்தில் மீண்டும் சைபர் கிரைம் பிரிவிற்கு மாற்றப்பட்டிருந்தார்.

பரசுராமின் மனைவி ஸ்வேதா கர்ப்பிணியாக உள்ளார். பிரசவத்துக்காக அவர் தனது சொந்த ஊரான ராய்ச்சூருக்கு சென்றிருந்தார். இரு நாட்களுக்கு முன் பரசுராமுக்கு திடீர் என உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மூக்கு வாய் வழியாக ரத்தம் கொட்டியது. உடனடியாக அவரது உறவினர்கள் பரசுராமை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் பரசுராம் இறந்து விட்டார்.

தனது கணவர் மறைவுக்கு காரணம் காங்கிரஸ் எம்எல்ஏ சன்னாரெட்டியும் அவரது மகன் பாம்பன கவுடாவும் தான் காரணம் என சுவேதா பேட்டி அளித்துள்ளார்.

இது தொடர்பாக கூறிய அவர்  நகர போலீஸ் நிலையத்தில் இருந்து மாற்றப்பட்டபோது இடமாற்றம் செய்ய வேண்டாம் என்று எம்எல்ஏவிடம் என்து கணவர் கெஞ்சினார். அப்போது 30 லட்சம் ரூபாய் கொடுத்தால் அதே இடத்தில் பணியாற்ற வைப்பதாகவும் எம்எல்ஏ லஞ்சம் கேட்டார். இதனால் என் கணவர் கடும் மன உளைச்சலில் இருந்து வந்தார். இப்போது திடீரென இறந்து விட்டார் இதற்கு எம்எல்ஏவும் அவரது மகனும் தான் பொறுப்பு. எனக்கு நீதி தேவை என்று கூறி உள்ளார்.

இவரது இந்த பேட்டி கர்நாடக மாநிலத்தின் அனைத்து பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளிவந்தது. சமூக வலைத்தளங்களிலும் பரவி வருகிறது. இந்த செய்தி  பரவியதும் தலித் சங்கர்ஸ் சமிதி என்ற கட்சி  சார்பில் கண்டன போராட்டம் தொடங்கியது. சாலை மறியலிலும் ஈடுபட்டனர். போராட்டத்தில் சுவேதா குடும்பத்தினரும் பங்கேற்றனர்.

மாநில எதிர்க்கட்சியான பாஜக ,மதச்சார்பற்ற ஜனாதளம் பிரமுகர்களும் கடும்  கண்டனம் தெரிவித்தனர். முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா குமாரசாமி ஆகியோர் எம்எல்ஏ சன்னா ரெட்டி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இதற்கிடையில் மாவட்ட எஸ்பி சங்கீதாவிடம் ஸ்வேதா புகார் அளித்தார். நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் உயர் அதிகாரிகள் உறுதி அளித்த பின்னர் சாலை மறியல் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இதனை தொடர்ந்து எம்எல்ஏ சன்னா ரெட்டி மற்றும் அவரது மகன் பாம்பனக்கவுடாவுக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News