துறையூர் அருகே ராணுவ வீரர் வீட்டில் நகை திருடிய 2 கொள்ளையர்கள் கைது

துறையூர் அருகே ராணுவ வீரர் வீட்டில் நகை திருடிய 2 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-11-23 17:17 GMT

கைது செய்யப்பட்ட இரண்டு கொள்ளையர்கள்.

திருச்சி மாவட்டம் தா.பேட்டை அடுத்த சக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது70). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி சரோஜாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் வேலாயுதம் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு துறையூர் தனியார் மருத்துவமனைக்கு சரோஜாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் வேலாயுதம் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு துறையூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மனைவியை அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் திறந்து கிடந்தது.உள்ளே சென்று பார்த்த போது பூஜை அறையில் இருந்த 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் 31 பவுன் தங்க நகைகள் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து தா.பேட்டை போலீஸ் நிலையத்தில் வேலாயுதம் அளித்த புகாரின் பேரில் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு பீரோவில் பதிவாகியிருந்த மர்ம நபர்களின் கைரேகையை பதிவு செய்தனர். மேலும் தா.பேட்டை இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது பீரோவில் பதிவாகி இருந்த மர்ம நபர்களின் கைரேகையை பழைய குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளின் கைரேகையோடும் ஒப்பிட்டு பார்த்தும் தீவிரமாக போலீசார் விசாரணை செய்தனர். அப்போது ஈரோடு மாவட்டம், கொடுமுடி தாலுகா, ஓடக்கரை தோட்டம்பகுதியை சேர்ந்த சண்முகம் என்கிற கணேசன் (41), சசிகுமார் (28) ஆகியோரது கைரேகை இந்த திருட்டு சம்பவத்தில் பதிவாகி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தா.பேட்டை இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கொடுமுடி சென்று சண்முகம்என்கிற கணேசன், சசிகுமார் ஆகிய இருவரையும் மடக்கி பிடித்தனர். அப்போது அவர்கள் சக்கம்பட்டி கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரர் வேலாயுதம்என்பவரின் பூட்டி இருந்த வீட்டை திறந்து பீரோவை உடைத்து நகைகளை திருடி சென்றதை ஒப்புக்கொண்டனர்.

மேலும் அவர்களிடமிருந்து 24பவுன் தங்க நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து துறையூர் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் சேர்ந்து பகலில் பூட்டப்பட்டிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு பணம்,நகைகளை திருடி செல்வதும், திருச்சி, நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News