ஆபாச பட வழக்கில் கணவரை தொடர்ந்து நடிகை ஷில்பா ஷெட்டியும் கைதாகிறாரா?
ஆபாச பட வழக்கில் கணவர் ராஜ்குந்த்ராவைத் தொடர்ந்து, நடிகை ஷில்பா ஷெட்டியும் கைதாக வாய்ப்பு உள்ளதாக பாலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.;
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா ஆபாசப் படங்களைத் தயாரித்து, விநியோகித்து வந்ததாக கடந்த வாரம் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ராஜ்குந்த்ரா ஆபாசப் படங்களைத் தயாரித்தது நடிகை ஷில்பா ஷெட்டிக்கு ஏற்கனவே தெரியும் என்றும் கூறப்படுகிறது. நடிகைக்கு இந்த வழக்கில் தொடர்பு உள்ளதா? என்பதை கண்டறிய போலீசார் சமீபத்தில் அவரிடம் விசாரணை நடத்தினர். அவசியம் என்றால் மீண்டும் விசாரிக்கவும் போலீசர் தயாராக உள்ளனர்.
இந்நிலையில் மும்பை போலீசார் நடிகை ஷில்பா ஷெட்டி குற்றமற்றவர் என்று கூறமுடியாது என தெரிவித்துள்ளனர்.
அதோடு ராஜ்குந்த்ராவின் பண பரிமாற்றங்கள் மற்றும் வங்கி கணக்குகள் குறித்து ஆய்வு செய்ய மும்பை குற்றப்பிரிவு போலீசார் நிதி தணிக்கையாளர்கள் குழுவை நியமித்து உள்ளனர்.
இந்தக் குழுவின் தணிக்கை மற்றம் விசாரணை வளையத்தில் ராஜ்குந்த்ராவின் வயான் இண்டஸ்ட்ரீஸ், ஆபாச படம் வெளியிட்டு மோசடி செய்த நிறுவனத்தின் கணக்குகளும் , நடிகை ஷில்பா ஷெட்டி இயக்குனராக செயல்பட்ட நிறுவனத்திற்கு சொந்தமான வங்கிக் கணக்குகளும் அடங்கியுள்ளது என்று கூறப்படுகிறது.
ஆபாச பட தொழில் மூலம் நடிகையின் கணவர் ராஜ்குந்த்ராவிற்கு வெளிநாட்டில் இருந்து வந்த பணம், ஷில்பா ஷெட்டியின் வங்கிக் கணக்கிலும் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் பரபரப்பாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஷில்பா ஷெட்டிக்கு ஆபாச பட தொழிலில் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் சிக்குமா என்கிற எதிர்பார்ப்பில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
அவ்வாறு நடிகை ஷில்பா ஷெட்டியும் சிக்கும் பட்சத்தில் கணவர் ராஜ்குந்த்ராவை தொடர்ந்து, நடிகையும் கைதாக வாய்ப்புள்ளது என்று பாலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேச படுகிறது.