அவசர கதியில் மும்பையில் செட்டில் ஆன சூர்யா? ஏன்?
நடிகை ஜோதிகாவும் தற்போது ஹிந்தி வெப்சீரிஸ்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறாராம். அதுமட்டுமின்றி 2டி தயாரிப்பு நிறுவனம் ஹிந்தியிலும் அடியெடுத்து வைக்கப்போகிறதாம். விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வரும் என்கிறார்கள்.;
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா, இவரது படங்கள் ஜனரஞ்சகமாகவும் கருத்துக்கள் சொல்லும் வகையிலும், ஏதோ ஒரு விசயத்தை உள்ளடக்கியதாகவும் இருக்கும். மக்கள் மத்தியில் பேசப்படக்கூடிய நல்ல விசயங்களை படத்தில் வைக்கக்கூடியவர் சூர்யா. அந்த வகையில் இவர் சினிமா மட்டுமின்றி பொதுசேவையிலும் ஈடு பட்டு வருகிறார். அப்பா, அம்மா மீது மிகுந்த பாசம் கொண்ட சூர்யா திடீரென்று மும்பையில் வீடு வாங்கி அங்கேயே செட்டில் ஆகவுள்ளதாக தகவல் பரவி வருகிறது. சிலரோ சூர்யா மும்பையில் செட்டி ஆகிவிட்டார். மும்பை சென்று 1 மாதம் ஆகிறது என்று கூறுகிறார்கள்.
இந்நிலையில், சூர்யா திடீரென்று ஏன் மும்பை செல்லவேண்டும் அங்கு வீடு வாங்கி குடியேற என்ன காரணம். படத்துக்காக என்றால் அலுவலகம் மட்டும் போட்டால் போதாதா. இதன் பின்னர் ஜோதிகா இருக்கிறாரா என பல கேள்விகளைக் கேட்டு நெட்டிசன்கள் குடைந்து வருகின்றனர்.
ஜோதிகாவும் நடிகை என்பதால் அவருக்கும் தமிழ் சினிமாவில் நிறைய படங்கள் வந்துகொண்டே இருந்தன. ஆனால் சினிமாவில் நடிக்க வேண்டாம் என வீட்டில் இருப்பவர்கள் சொன்னார்களோ என்னவோ
கிட்டத்தட்ட 4 வருடங்கள் காதலித்து வீட்டில் அனுமதி பெற்று திருமணம் செய்துகொண்டுள்ளனர் சூர்யா ஜோதிகா இணையர். இவர்களுக்கு திவ்யா, தேவ் என இரு பிள்ளைகளும் இருக்கிறார்கள். இவர்களையும் மும்பையில் உள்ள ஒரு பள்ளியில் படிக்க சேர்த்து விட்டிருக்கிறார்களாம்.
900 சதுர அடி கொண்ட இந்த வீட்டின் மதிப்பு 70 கோடி ரூபாய் என்று தற்போது தகவல் கிடைத்துள்ளது. இந்த வீட்டில்தான் இப்போது சூர்யா குடும்பம் வசித்து வருகிறதாம். இங்கு சூர்யா வந்து செல்லும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் சுற்றி வருகின்றன.
நடிகை ஜோதிகாவும் தற்போது ஹிந்தி வெப்சீரிஸ்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறாராம். அதுமட்டுமின்றி 2டி தயாரிப்பு நிறுவனம் ஹிந்தியிலும் அடியெடுத்து வைக்கப்போகிறதாம். விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வரும் என்கிறார்கள். மற்றபடி மாமனாருக்கும் மருமகளுக்கும் பிரச்னை, சூர்யாவுக்கும் அவரது அப்பா சிவகுமாருக்கும் பிரச்னை, தம்பியுடன் சண்டை என பரவும் விசயங்கள் வெறும் வதந்திதான் என்கிறார்கள்.