ஜெயிலர் படத்தில் நடிக்காதது ஏன்? பிரியங்கா அருள் மோகன் பளிச் பதில்

Priyanka Arul Mohan Next Movie -ஜெயிலர் படத்தில் நடிக்காதது ஏன்? என்பதற்கு நடிகை பிரியங்கா அருள் மோகன் பளிச் என பதில் அளித்துள்ளார்.;

Update: 2022-09-13 09:27 GMT

பிரியங்கா அருள் மோகன்.

Priyanka Arul Mohan Next Movie -சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் மற்றும் டாக்டர் ஆகிய இரு படங்களும் பெரும் வெற்றியை பெற்றன. இரு படங்களும் 100 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபீஸில் சேர்ந்து சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் சென்றன. இந்த இரு படங்களிலும் அவருக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்தார். சிவகார்த்திகேயனுக்கும் பிரியங்கா அருள் மோகனுக்கும் கெமிஸ்டிரி சூப்பராக செட் ஆனதால், இரு படங்களும் ரசிகர்களின் மனதையும் கவர்ந்திருந்தன. இதனால் பிரியங்கா அருள் மோகனுக்கும் தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்ததால் அவருக்கான மார்க்கெட்டும் கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் ஜெட் வேகத்தில் எகிறியது. இதனால் சூர்யாவுடன் சேர்ந்து எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்த அவர், தற்போது ஜெயம் ரவியுடன் கூட்டணி அமைத்திருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' படத்திலும் இவர் நடிப்பதாக தகவல் வெளியானது. சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் சூட்டிங் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறாரா? இல்லையா? என்ற சந்தேகம் ரசிகர்களிடம் இருந்தது




 


சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா நடித்து வெற்றி பெற்ற டாக்டர் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்ததால், ஜெயிலர் படத்திலும் பிரியங்கா அருள் மோகனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம் என தகவல் பரவியது. இந்நிலையில், இந்த தகவலுக்கு முதன்முறையாக மவுனம் கலைத்துள்ளார் பிரியங்கா அருள் மோகன். யார்ட்லி நிறுவனத்தின் விளம்பர தூதுவராக நியமிக்கப்பட்டிருக்கும் அவரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர், ஜெயிலர் படத்தில் தான் நடிப்பதாக பரவும் தகவலில் உண்மையில்லை எனத் தெரிவித்தார். மேலும், நம்பர் ஒன் நடிகை அந்தஸ்து மீதும் தனக்கு உடன்பாடில்லை என பளிச்சென பதில் அளித்துள்ளார். 



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News